இரவில் ஜொலித்த ஈசிஆர் கடற்கரை..!! அதுவும் நீல நிறத்தில்..!! காரணத்தை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தோன்றிய நீல நிற ஒளிரும் அலைகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், கடல் அலைகள் ஒளிர்ந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. அன்புமணி ராமதாஸ் கிழக்கு கடற்கரைச் சாலையில்தான் இருக்கிறார். பீச் அவுஸ் எனப்படும் கடற்கரைக்கு அருகே வீடு கட்டியிருக்கிறார். அதாவது, ஈசிஆரில் இரவு நேரத்தில் வரும் அலைகள் ஏதோ விளக்குகள் எரிவது போல் பிரகாசமாக எரிகின்றன. இரவில் கடல் நீல நிறத்தில் மாறும் போது இந்த நிகழ்வு நடக்கும்.
நீர் வாழ் உயிரினங்கள்
இதற்கு பயோலுமினென்சென்ஸ் என பெயராகும். இது பாக்டீரியா, பூஞ்சை, பாசிகள், பூச்சிகள் போன்ற நீர் வாழ் உயிரினங்களால் ஏற்படுகிறது. இந்த உயிரினங்களுக்குள் நிகழும் ஒரு வகை வேதியியல் எதிர்வினையாகும். இந்த நிகழ்வு ஏற்படும் போது அலைகளால் உயிரினங்கள் கரைக்கு அடித்து வரப்படுகின்றன. இதனால்தான் கடற்கரைகள் நீல நிறத்தில் மின்னுகின்றன.
அக்டோபரில் அதிசயம்
இரவு நேரத்தில் இதை காண நிறைய பேர் வருவதுண்டு. இது போன்ற நிகழ்வுகள் ஜூன் முதல் செப்டம்பர் வரை நிகழும் என கூறப்படுகிறது. ஆனால், இம்மாதமே அந்த நிகழ்வு ஈசிஆரில் நடந்துள்ளது. ஒரு வேளை வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக கடல் பாசிகள் கரைக்கு அடித்து வரப்பட்டனவா என தெரியவில்லை. இந்த திருவான்மியூர் கடற்கரையானது அழகான சூரிய உதய காட்சிகளை வழங்கும். இங்கு 2019ஆம் ஆண்டு பயோலுமினென்சென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் இருக்கும் ஒரே ஒளிரும் கடற்கரை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நீல நிறத்தில் தெரிய இதுதான் காரணம்
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல கடற்கரைகளில் இதுமாதிரி தோன்றுவது வழக்கமான ஒன்றாகும். கடல் அலைகள் இப்படி நீல நிறத்தில் தோன்றுவதற்கு முக்கிய காரணம், கடலில் வாழும் உயிரினத்தின் உள்ளே அல்லது வெளியே நிகழும் இரசாயன எதிர்வினைகளின் விளைவாகும் என சொல்லப்படுகிறது. உதாரணமாக மின்மினி பூச்சியின் உடலில் இருந்து வெளிப்படும் ஒளி அந்த இடத்தில் பிரகாசமாக தெரிகிறதோ அப்படித்தான் இந்த அலைகள் தோன்றுகிறது.
இந்த மாற்றமானது வேட்டையாடுபவர்களை எச்சரித்தல் அல்லது தவிர்ப்பது, இரையை ஈர்ப்பது அல்லது கண்டறிதல், ஒரே இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடையே தொடர்பு வைத்துக் கொள்வது போன்ற நிகழ்வுகளுக்காக உதவுகிறது. இந்த ரசாயன மாற்றம் கடல் மேற்பரப்பில் இருந்து ஆழமான கடற்பரப்பு வரை நிகழ்கிறது எனவும் கூறப்படுகிறது.
Read More : மனைவியுடன் 15 வயது சிறுவனுக்கு கள்ளத்தொடர்பு..!! நண்பனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை தூக்கி வீசிய கணவன்..!!