முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபான்மையினர் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்...!

Economically backward minorities can apply for education loans
06:40 AM Dec 21, 2024 IST | Vignesh
Advertisement

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தனிநபர் கடன் சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

Advertisement

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலமாக தனிநபர் கடன் சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி திட்டம்-1-ல் கடன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் உச்ச வரம்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.98.000/- நகர்புறமாயின் ரூ.1,20,000/- என இருந்து வந்த நிலையில், தற்போது கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் சிறுபான்மையினர் மக்கள் அனைவருக்கும் ஆண்டு வருமான வரம்பு ரூ.3,00,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வருகிறது. எனவே. இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை. வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் /திட்ட அறிக்கை. ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும், கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate), கல்வி கட்டணங்கள் செலுத்திய இரசீது/சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டங்களில் தகுதி வாய்ந்த அனைத்து சிறுபான்மையினர் மக்களும் விண்ணப்பித்து பெறலாம்.

Tags :
education loanLOANtn government
Advertisement
Next Article