மருத்துவர் வன்கொடுமை எதிரொலி!. ஒவ்வொரு 2 மணி நேரமும்!. அனைத்து மாநிலங்களுக்கும் பறந்த உத்தரவு!. மத்திய அரசு அதிரடி!
Central government: சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிக்கை அனுப்புமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிக்கை அனுப்புமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற பலாத்கார சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
அதன்படி, நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் நகலில், சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிக்கை அனுப்புமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களில் அதிகரித்து வரும் குற்றங்களை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவு நகல் அனுப்பப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து எழுந்துள்ள கேள்விகளைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவின் கீழ், அனைத்து மாநிலங்களும் சட்டம் ஒழுங்கு அறிக்கைகளை மின்னஞ்சல், தொலைநகல் அல்லது வாட்ஸ்அப் மூலம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அனுப்ப வேண்டும்.
இந்த உத்தரவு குறித்து உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அதிகாரி மோகன் சந்திரா பண்டிட் கூறுகையில், “பாதுகாப்பைக் கண்காணிக்கவும், நிலைமை கட்டுப்பாட்டை மீறாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.