முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Ebrahim Raisi | ஈரான் அதிபர் உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ..!! இம்ராஹிம் ரைசியின் கடைசி தருணம்..!!

02:56 PM May 20, 2024 IST | Chella
Advertisement

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Advertisement

Ebrahim Raisi | ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் - அர்பைஜான் எல்லை பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவருடன் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி உள்ளிட்ட விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், 17 மணி நேர தீவிர தேடலுக்குப் பிறகு மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த இடத்தை கண்டுபிடித்து, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இறுதியாக விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் இருப்பது பதிவாகியுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவுக்கு உலக நாட்டு தலைவர்கள் மட்டுமல்லாது, பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Read More : ’அடையாளமே தெரியல’..!! நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அதிபரின் உடல் மீட்பு..!!

Advertisement
Next Article