Ebrahim Raisi | தலைமை நீதிபதி to ஈரான் அதிபர்..!! ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இம்ராஹிப் ரைசியின் பின்னணி என்ன..?
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற விமானம் மலையில் மோதி விபத்தில் சிக்கியது. யார் இந்த இப்ராஹிம் ரைசி. இவரது பின்னணி என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
Ebrahim Raisi | ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட மூத்த அதிகாரிகள் சிலரும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்ராஹிம் ரைசி யார்.. இவர் எப்படி அதிபரானார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 1960 டிசம்பர் 14ஆம் தேதி அங்குள்ள மஷாத்தின் நோகன் மாவட்டத்தில் ஒரு மதகுரு குடும்பத்தில் பிறந்தவர் தான் இப்ராஹிம் ரைசி. இவர், சட்டப் படிப்பை முடித்துள்ளார். ஈரானின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவராகவும் வளம் வந்தார். தொடர்ந்து நீதிபதியாக பணியாற்றிய அவர், கடந்த 2019ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. ஏனென்றால், ஈரான்- ஈராக் போருக்குப் பின் 1988இல் அரசியல் கைதிகள் பலர் தூக்கிலிடப்பட்டதில் ரைசிக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
இதனால் அவரை தலைமை நீதிபதியாக நியமித்ததை பல அமைப்புகள் எதிர்த்தன. 60 வயதான ரைசி, தன்னை பற்றி ஊடகங்களில் பேசும் போது இதைக் கவனமாகத் தவிர்த்துவிடுவார். ஊழலை எதிர்த்துப் போராடும் நபர் என்றும் ஈரானின் நிதிப் பிரச்சனைகளைச் சமாளிக்கச் சரியான நபர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். ரைசி முதலில் 2017ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும், அந்தத் தேர்தலில் அவர் ஹசன் ரூஹானியிடம் தோல்வி அடைந்தார். 4 ஆண்டுகள் கழித்து 2021இல் ரைசி மீண்டும் போட்டியிட்ட நிலையில், அவரது முக்கிய எதிரிகள் அனைவருக்கும் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டன.
இதனால் வலுவான தலைவர்கள் யாரும் ரைசிக்கு எதிராகப் போட்டியிடவில்லை. அந்த தேர்தலில் வாக்குப்பதிவும் வரலாறு காணாத வகையில் குறைந்து. இருந்த போதிலும் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஈரான் அதிபராக இவர் பதவியேற்ற உடனேயே கலாச்சார சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்டன. கடந்த 2022 முறையாக ஹிஜாப் அணியாததால் மஹ்ஸா அமினி என்ற 22 வயது இளம் பெண் அந்நாட்டின் கலாச்சார காவலர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மிக பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்றது.
போராட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு போலீசார் வன்முறையைப் பயன்படுத்தினர். இந்த போராட்டங்களின் போது மட்டும் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஈரான் நாட்டை பொறுத்தவரை அதிபரைக் காட்டிலும் கூடுதல் அதிகாரம் உள்ளவர் என்றால் அது அந்நாட்டின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தான். இந்த உட்சபட்ச தலைவரின் வாரிசாகவே ரைசி பார்க்கப்படுகிறார். 85 வயதான அய்துல்லா அலி கமேனிக்கு பிறகு அந்த பதவிக்கு ரைசியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : ‘Hard Landing’ என்றால் என்ன?… ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் சம்பவம் குறித்து முன்னாள் விமானி விளக்கம்!