படுக்கை அறையில் திருப்தியாக இல்லையா.! இதை உணவில் சேர்த்துக்கோங்க போதும்.!?
பொதுவாக பலருக்கும் திருமணத்திற்கு பின்பு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு படுக்கை அறையில் திருப்தி இல்லாமல் போய்விடுகிறது. ஹார்மோன்கள், மன அழுத்தம் இப்படி பல்வேறு காரணம் இருந்து வந்தாலும், நவீன காலத்தில் மாறிவரும் உணவு பழக்கமும், உடற்பயிற்சி இல்லாததும் மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இவ்வாறு படுக்கை அறையில் கணவன், மனைவி திருப்தியாக இருப்பதற்கு ஒரு சில உணவு முறைகளை மாற்றிக் கொள்ளலாம். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்..
நட்ஸ் வகைகள்: தினமும் காலையில் அல்லது இரவில் தூங்க செல்வதற்கு முன்பு நிலக்கடலை, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, முந்திரி, வால்நட் போன்றவற்றை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். இது அன்றைய நாளுக்குரிய ஆற்றலை தருவதோடு, மன அழுத்தத்தையும் குறைத்து படுக்கையறையில் நன்றாக செயல்பட உதவுகிறது.
அவகோடா: உடலில் ஆற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்க உதவும் b6 ஃபாலிக் அமிலம் அவகோடா பழத்தில் நிறைந்துள்ளது. இதனை உண்பதன் மூலம் உடலுறவுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
பூசணி விதைகள்: பெரும்பாலும் இந்தியாவில் பூசணி விதைகளை யாரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் பூசணி விதையில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள இரும்பு மற்றும் மெக்னீசிய சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. மேலும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோனை அதிகரித்து படுக்கை அறையில் மகிழ்ச்சியை அளிக்கிறது.
தர்பூசணி விதைகள்: பொதுவாக தர்பூசணி பழத்தை விட தர்பூசணியில் உள்ள விதைகள் உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டசத்தை அளிக்கக்கூடியது. இதனை சாப்பிடுவதன் மூலம் பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.
பூண்டு: பூண்டில் அல்லிசின் அமிலம் நிறைந்துள்ளது. இது ஆணுறுப்பில் விறைப்பு தன்மையை அதிகரிக்கிறது. இவ்வாறு நம் உணவு பழக்க வழக்கங்களில் ஒரு சில விஷயங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் படுக்கை அறையில் திருப்தியாக இருக்கலாம். இதனால் குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.