For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உஷார்.. ஒரு பிரெஞ்ச் ஃப்ரைஸ் 25 சிகரெட் புகைப்பதற்கு சமம்..!! - நிபுணர்கள் எச்சரிக்கை..

Eating just one serving of French Fries can be as harmful as smoking 25 cigarettes, warns cardiologist
07:37 PM Oct 03, 2024 IST | Mari Thangam
உஷார்   ஒரு பிரெஞ்ச் ஃப்ரைஸ் 25 சிகரெட் புகைப்பதற்கு சமம்       நிபுணர்கள் எச்சரிக்கை
Advertisement

பிரெஞ்ச் ஃப்ரைஸ் யாருக்குதான் பிடிக்காது.. உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பப்படும் உணவு வகைகளில் ஒன்றாக பிரெஞ்ச் ஃப்ரைஸ் உள்ளது. அவற்றின் மிருதுவான அமைப்பும் உப்பு சுவையும் மீண்டும் சாப்பிட வைக்கிறது. இருப்பினும், இந்த சுவையான உணவு வகை கடுமையான உடல் நலப்பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

சமீபத்திய ஆராய்ச்சியில், பிரெஞ்ச் ஃப்ரைஸ்  அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன், இதய பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் புற்று நோய் அபாயம் இருப்பதாகவும் அந்த ஆராய்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரெஞ்ச் ஃப்ரைஸ் 25 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என டாக்டர் ராவ் வெளிப்படுத்தினார்.

விளைவுகள் :  புதிய ஆராய்ச்சியின் படி, பிரெஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிட்டால் உடல் எடை கூடும். அதுமட்டுமின்றி, இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பிரஞ்சு ஃப்ரைஸ் தயாரிக்கப்படும் விதத்தால் தீங்கு விளைவிக்கும். அதிக வெப்பநிலையில் ஆழமாக வறுக்கப்படுவது அதில் ஆரோக்கியமற்ற கூறுகளை உருவாக்குகிறது. இதய நோய் நிபுணர் ரவீந்தர் சிங் ராவ் கூறுகையில், பிரெஞ்ச் பிரைஸ் தயாரிக்க எந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை. அதிக சூடாக்கப்பட்ட எண்ணெய் இதயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

பிரஞ்சு ஃப்ரைஸ் என்பது வறுத்த உருளைக்கிழங்கு என்பது அனைவருக்கும் தெரியும். பொரித்த உருளைக்கிழங்கு சாப்பிடும் இந்த சமையல் முறை எங்கிருந்து தொடங்கியது தெரியுமா? உருளைக்கிழங்கை வறுக்கும் பழக்கம் முதலில் பிரான்ஸ் மற்றும் வடக்கு பெல்ஜியத்தைச் சுற்றியுள்ள இடங்களில் தொடங்கியது.

பிரஞ்சு ஃப்ரைஸ் உருவான வரலாறு : பெல்ஜியத்தில் மாஸ் பள்ளத்தாக்கு அருகே ஒரு கிராமம் இருந்தது. இந்த ஊர் மக்கள் ஆற்றில் மீன் பிடித்து வறுத்து சாப்பிட்டு வந்தனர். ஆனால் குளிர்காலத்தில் நதி உறைந்திருந்தது. அப்போது மீன்கள் சரியாக பிடிபடவில்லை. அதனால் அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. அங்குள்ள மக்கள் வயிறு நிரம்ப வறுத்த உருளைக்கிழங்கைச் சாப்பிட ஆரம்பித்தனர். உருளைக்கிழங்குகளும் மீன் போல் வெட்டி வறுக்கப்பட்டன. குளிர்காலத்தில் இது அவர்களின் முக்கிய உணவாக மாறியது.

17ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சி நடந்து கொண்டிருந்தது. இதன் போது படையினருக்கு பிரஞ்சு பொரியல் சாப்பிட வழங்கப்பட்டது. பிரான்சில் உள்ள புகழ்பெற்ற பாரிஸ் பாலத்தின் பெயரால் இது Frates Pont Neuf என்று அழைக்கப்பட்டது. முதல் உலகப் போரின் போது அமெரிக்க ராணுவம் இங்கு வந்தது. பின்னர் அமெரிக்க வீரர்கள் பிரெஞ்சு பொரியல் பற்றி அறிந்து கொண்டனர், அவர்கள் அதை மிகவும் விரும்பினர். முதலில் கெட்ச்அப், மயோனைஸ் மற்றும் வினிகர் சேர்த்து சாப்பிட ஆரம்பித்தார்கள். பின்னர் அதற்கு பிரெஞ்சு ஃப்ரைஸ் என்று பெயரிட்டார்.

Read more ; விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்..! இல்லையென்றால்.. கெடு வைத்த இந்து மக்கள் கட்சினர்..!! – என்ன விவகாரம்?

Tags :
Advertisement