கீரைகள் சாப்பிடுவதால் எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படுமா.? வாங்க உண்மையை தெரிந்து கொள்ளலாம்.!
கீரைகள் நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. இதில் அதிகப்படியான வைட்டமின்கள் கால்சியம் மற்றும் மினரல்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் கீரைகளை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்து நமது செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. கீரைகள் கண் பார்வையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வைக்கிறது. கீரைகளின் இத்தனை நன்மைகள் இருந்தாலும் அவற்றால் நமது உடலுக்கு சில தீமைகளும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.? என்ன தீமை என்று இந்த பதிவில் பார்ப்போம்.
கீரைகளில் கால்சியம் சத்து அதிக அளவு இருக்கிறது. ஆனால் இந்த கால்சியம் சத்துக்களால் நம் உடலுக்கு எந்த நன்மையும் ஏற்படாது இதற்குக் காரணம் கீரையில் இருக்கக்கூடிய மற்றொரு பொருள்தான். அதாவது கீரையில் ஆக்சலேட் என்ற சக்தி இருக்கிறது. இந்த சத்து நமது எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச விடாமல் தடுக்கிறது. இதன் காரணமாக எலும்புகளுக்கு போதுமான கால்சியம் சத்து கிடைப்பதில்லை.
எனவே தான் இரவில் கீரை சாப்பிட வேண்டாம் என நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் கீரை சாப்பிட்ட பின் கால்சியம் நிறைந்த எந்த ஒரு உணவுப் பொருளை சாப்பிட்டாலும் கீரையில் இருக்கக்கூடிய ஆக்சலேட் நம் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சுவதை தடுக்கிறது. இதனால் எலும்புகளுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.
இதன் காரணமாக எலும்பு சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள் கீரையை தவிர்த்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த ஒரு குறைபாட்டை தவிர இறையில் இருக்கக்கூடிய மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நமது உடலுக்கு நன்மை தரக்கூடியவையாக இருக்கின்றன. எனவே கீரையை சாப்பிடுவது நல்லது தான். ஆனால் கீரையுடன் சேர்த்து கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.