For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடடே.! தினமும் ஒரு ஸ்பூன் குல்கந்த் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.?

06:00 AM Dec 03, 2023 IST | 1newsnationuser4
அடடே   தினமும் ஒரு ஸ்பூன் குல்கந்த் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா
Advertisement

குல்கந்து என்பது ரோஜா இதழ்களுடன் கற்கண்டு, தேன், கசகசா, வெள்ளரி விதை மற்றும் குங்குமப்பூ சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட ஒரு இனிப்பாகும். ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. இதனை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வருவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம் .

Advertisement

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் குல்கந்தை பாலில் கலந்து குடித்து வர தூக்கமின்மை சரியாகி நல்ல தூக்கத்தை பெறலாம். வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் குல்கந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் அல்சரை குணமாக்குவதற்கு குல்கந்து மிகவும் உதவி புரிகிறது. அல்சரால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் குல்கந்தை எடுத்துக் கொள்ள வயிற்றுப்புண் சரியாகும்.

வியர்வை மற்றும் வியர்வையினால் வரும் துர்நாற்றத்திற்கு குல்கந்து ஒரு சிறந்த தீர்வாகும். இதனை தினமும் சாப்பிட்டு வர வியர்வை மற்றும் வியர்வையிலிருந்து வரும் துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெறலாம். மேலும் இது உடல் உஷ்ணத்தை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. ஆண்மை அதிகரிப்பதற்கும் குழந்தை பேரு பெறுவதற்கும் குல்கந்து ஒரு சிறந்த மருந்தாகும். தொடர்ந்து 48 நாட்கள் குல்கந்து சாப்பிட்டு வந்தால் இதயம் குடல் மற்றும் கல்லிடையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளுக்கு குல்கந்து ஒரு சிறந்த மருந்தாகும். இதனைத் தொடர்ந்து எடுத்து வர இந்தப் பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். மேலும் பித்தம் மற்றும் பித்தத்தினால் ஏற்படும் வாந்தி குமட்டல் ஆகியவற்றிற்கும் குல்கந்து சாப்பிடுவது அருமருந்தாக இருக்கிறது. தினமும் சுவையான இந்த குல்கந்தை ஒரு ஸ்பூன் சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளை பெறலாம்.

Tags :
Advertisement