For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாப்பில் இருக்கும் விடாப்படியான கறையை நீக்கி, புதுசு போல் மாற்ற வேண்டுமா?? அப்போ கட்டாயம் மாதம் ஒரு முறை இப்படி செய்யுங்க..

easy ways to clean dirty mop
07:29 AM Jan 15, 2025 IST | Saranya
மாப்பில் இருக்கும் விடாப்படியான கறையை நீக்கி  புதுசு போல் மாற்ற வேண்டுமா   அப்போ கட்டாயம் மாதம் ஒரு முறை இப்படி செய்யுங்க
Advertisement

பொதுவாகவே, பெரும்பாலானோர் வீட்டை அடிக்கடி மாப் பயன்படுத்தி துடைப்பது உண்டு. அப்போது தான் தரை பளிச்சென்று இருக்கும். ஆனால் பல நீங்களில் ஆனால் வீட்டை சுத்தம் செய்யும் மாப்பை நாம் சுத்தமாக வைப்பது இல்லை. இதனால் மாப் எப்போதும் அழுக்காக இருக்கும். அழுக்கான மாப் பயன்படுத்தி நாம் தரையை சுத்தம் செய்து எந்த பயனும் இல்லை. தரையில் கிருமிகள் அதிகமாகத்தான் செய்யும். குழந்தைகள் உள்ள வீடுகளில் தரையில் இப்படி குருமிகள் இருக்கும் போது, அவர்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நாம்மாப்பை முறையாக க்ளீன் செய்வது கட்டாயம். எனவே, வீட்டை சுத்தம் செய்ய பிறகு மாப்பில் உள்ள அழுக்குகளை எப்படி முறையாக க்ளீன் செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Advertisement

இதற்கு முதலில், ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் மாப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது வேறொரு பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்து கலந்துவிட வேண்டும். பின்னர் அரைமணி நேரம் ஊற வைத்த மாப்பை எடுத்து, இந்த தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதே போல், வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து, அதில் மாப்பை 5 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இப்போது உங்கள் பழைய மாப் எண்ணெய் பசை நீங்கி புதிய மாப் போன்று மாறிவிடும்.

இந்த செய்முறையை செய்த பிறகும் உங்கள் மாப் கறையாக இருந்தால், ஒரு பக்கெட்டில் வெது வெதுப்பான நீரை ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி வாஷிங் லிக்விட் சேர்த்து நன்றாக கலக்கி விடுங்கள். பிறகு அதில் மாப்பை போட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவைத்து, பிறகு மாப்பை பிழிந்து சுத்தமான நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து பிழிந்து நன்றாக காயவிட வேண்டும். இதனால் உங்கள் மாப்பில் படிந்துள்ள விடாப்படியான கறைகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

Read more: பல் வலி அடிக்கடி வருதா? உங்க குழந்தைளின் பற்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்கள்..

Tags :
Advertisement