எமனாக மாறும் கொலஸ்ட்ரால்!! மருந்தே இல்லாமல் குறைக்க, சிறந்த வழி இது தான்..
கொலஸ்ட்ரால், பலரின் வாழ்கையில் எமனாக மாறு இந்த நோயை பலர் கண்டுக்கொள்வது இல்லை. இந்த நோய் என்ன செய்யப்போகிறது என்ற அலட்சியம் பலருக்கு இருப்பது உண்டு. உண்மையில், அதிக அளவு கொலஸ்ட்ரால் மாரடைப்பு, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். நமது இரத்தத்தில் ஏற்படும் கொழுப்பு படிவம் தான் கொலஸ்ட்ரால்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த என்ன தான் மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொண்டாலும், நமது உணவில் ஒரு சில விஷயங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்க்கு நீங்கள் காலையில் ஒரு ஸ்பூன் மஞ்சளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் கொலஸ்ட்ராலை மாத்திரை இல்லாமலே நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். எடை இழப்புக்கு பிரசித்தி பெற்ற க்ரீன் டீ, கெட்ட கொழுப்பை குறைத்து விடும்.
கொலஸ்ட்ராளுக்கு சக்திவாய்ந்த மருந்து என்றால் அது பூண்டு தான். தினமும் காலையில் சில பூண்டு பற்கள் சாப்பிடுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பு படிவம் குறைந்து விடும். மேலும், ஆளி விதைகளில் உள்ள ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம், உங்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்து. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மல்லி விதைகளில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, ஏ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது.
இதனால் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடித்தால், கொலஸ்ட்ராலை அடியோடு குறைத்து விடலாம். இதனுடன் சேர்த்து, உடற்பயிற்சி மேற்கொண்டால் நீங்கள் மாத்திரை மருந்துகளே இல்லாமல் கொலஸ்ட்ராலை குறைத்து விடலம்.