தோசைக்கல் இருந்தால் போதும்.. சுலபமாக பூண்டு தோலை உரித்து விடலாம்.. எப்படி தெரியுமா?
வீட்டில் இருக்கும் பல பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்றால், அது சமையல் அறையில் அதிக நேரம் செலவிடுவது தான். சாதரான சின்ன விஷயங்கள் கூட பல மணி நேரத்தை பறித்து விடும். அப்படி நாம் நாள் தோறும் செய்யும் வேலைகளை விரைவாக முடித்து விட்டால் நன்றாக இருக்கும் என்று பலர் ஆசைபடுவது உண்டு. உதராணமாக வெங்காயம் உரிப்பது, பூண்டு உரிப்பது போன்றவை. இதெல்லாம் சாதரணமாக தோன்றும், ஆனால் சிறிது பூண்டையோ வெங்காயத்தையோ உரிக்க ஆரம்பித்தால் அதிக நேரம் செலவாவதை தாண்டி, கை வலியே வந்து விடும். ஆனால் இனி நீங்கள் கவலை பட வேண்டாம். சுலபமாக எப்படி இந்த வேலைகளை செய்து முடிப்பது என்று பார்க்கலாம்.
சின்ன வெங்காயம் உரிக்க அதிக நேரம் ஆகும். அது மட்டும் இல்லாமல் வெங்காயம் உரிக்கும் போது, கண்களில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் வருவதால் நமக்கு மிகவும் சிரமமாக இருக்கம். இதற்கு நீங்கள், வெங்காயம் உரிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன், அவற்றை தண்ணீரில் ஊற போட்டு, பின் உரித்தால், தோலும் சுலபமாக உரிக்க வரும். கண்ணீரும் வராது.
இதற்கு பதில் நீங்கள், வெங்காயத்தின் இரு முனைகளையும் நறுக்கி விட்டு, சூடான வாணலியில் போட்டு சிறிது நேரம் புரட்டவும். கை பொறுக்கும் சூடுக்கு ஆறியதும் எந்த சிரமமும் இல்லாமல் சுலபமாக உரித்து விடலாம். அது மட்டும் இல்லாமல், இப்படி செய்வதால் வெங்காயம் சீக்கிரம் வதங்கி விடும்.
வீட்டில் சிறிதான அளவு பூண்டு இருந்தாலே அதனை உரித்து பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். அதிக நேரம் செலவாகும். பிரியாணி, புளிக்குழம்பு ஆகியவை செய்ய அதிக அளவில் பூண்டுகள் உரிக்க வேண்டிய தேவை இருக்கும். அந்த சமையத்தில், நாம் ஒவ்வொன்றாக உரிக்கும் போது, நீண்ட நேரம் ஆவதுடன் கைகளும் வலிக்கும். இதனை எப்படி எளிதாக மாற்றலாம் என இதில் பார்க்கலாம்.
முதலில் அடுப்பின் மீது தோசைக் கல்லை வைத்து சூடு படுத்த வேண்டும். தோசைக் கல் சூடானதும் நெருப்பின் அளவை குறைத்து விட்டு, அதன் மீது பூண்டுகளை போட்டு, பூண்டு தோலில் சூடு ஏறும்படி அதனை திருப்பி போட வேண்டும். சுமார் 3 நிமிடங்கள் இப்படி செய்தால் பூண்டு சூடாகி விடும். பின்னர், பூண்டுகளை தனியாக எடுத்து அவற்றின் மீது அரிசி மாவை தூவிக் கொள்ளுங்கள். இப்போது, சூடாக்கிய அனைத்து பூண்டுகளையும் ஒரு பைக்குள் போட்டு, தரையில் நன்றாக தட்டினால் பூண்டு தோல் அனைத்தும் சுலபமாக உரிந்து விடும்.
Read more: மூட்டுவலி, கால்வலி எல்லாம் காணாமல் போகும்.. இந்த ஊத்தாப்பம் சாப்பிட்டு பாருங்க..!