உங்கள் வீட்டின் தண்ணீர் டேங்க் சுத்தமாக இருக்க வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்க..
வீட்டின் தண்ணீர் டேங்க்கை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். நீண்ட நாட்களாக வாட்டர் டேங்க்கை சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் பல தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஆனால் வாட்டர் டேங்க்கை அவ்வளவு சுலபமாக சுத்தம் செய்து விட முடியாது. இதனால் பல நேரங்களில் நாம் டேங்க்கை சுத்தம் செய்யாமல் விட்டு விடுவோம். ஆனால் இந்த பதிவில், ப்ளாஸ்டிக் வாட்டர் டேங்க்குகளை எளிய முறையில், எப்படி முழுமையாக சுத்தம் செய்வது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதற்கு முதலில், ஒரு பெரிய வாளி, பேரலில் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். டேங்க்கை சுத்தம் செய்யும் நாளில், மோட்டர் போடாமல் ஏற்கனவே டேங்க்கில் உள்ள தண்ணீரை வெளியேற்றவும். இப்போது உங்கள் கையில் உறை, மற்றும் முகத்துக்கு மாஸ்க் அணிந்துக் கொள்ளுங்கள். இப்போது, டேங்க்கின் தரையையும் சுவரையும் ஸ்க்ரப் பயன்படுத்தி நன்றாக அழுத்தித் தேய்த்து சுத்தம் செய்யவும். இதனால், அழுக்கு, பூஞ்சை, பாசிகள் மற்றும் கறைகள் நீங்கிவிடும். பின்னர், அதிக வேகத்துடன் தண்ணீரை டேங்க்கில் அடித்து ஊற்றிக் கழுவிக்கொள்ளவும்.
ஸ்கிரப் செய்த பின்பு இருக்கும் அழுக்குகளை நீக்க, சந்தையில் கிடைக்கும் டேங்க்கை சுத்தம் செய்ய கிருமிநாசினி ஸ்பிரேக்களை பயன்படுத்தலாம். இவை, டேங்க்கில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அனைத்தையும் அகற்றும். பின்னர், டேங்க்கில் சிறிது தண்ணீர் நிரப்பி, வீட்டில் உள்ள குழாய்களைத் திறந்து, அதன் வழியே இந்தத் தண்ணீரை வெளியேற்றவும். இதனால் அழுக்காக இருக்கும் பைப்லைன்களும் சுத்தமாகம். இதற்க்கு பின்பு, சில மணி நேரம் டேங்க்கில் தண்ணீர் இல்லாமல், உலரவிடவும். பின்னர் வழக்கம் போல் தண்ணீர் நிரப்பிப் பயன்படுத்தவும்.
மிக முக்கியமாக, மொட்டை மாடியில் டேங்க்கை சுத்தம் செய்யும்போது தனியே செய்யாமல், உதவி, அவசரத்துக்கு என அருகில் ஒருவரையாவது துணைக்கு வைத்துக்கொள்ளவும்.
Read more: உங்கள் தொப்பையை குறைக்க இதை விட சிறந்த வழி கிடையாது!!!