வாஷிங் மெஷின் எத்தனை வருடமானாலும் பழுதாகாமல் இருக்க வேண்டுமா?? அப்போ மாதம் ஒரு முறை இப்படி சுத்தம் பண்ணுங்க..
வாஷிங் மெஷின் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அந்த அளவிற்கு அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக வாஷிங் மெஷின் மாறியுள்ளது. வாஷிங் மெஷின் இருப்பதால் பலரின் நேரம் மிச்சம் ஆகிறது. அடிக்கடி நாம் பயன்படுத்தும் வாஷிங் மெஷினை, நாம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது கட்டாயம். இல்லையென்றால், வாஷிங் மெஷின் பழுதாகிவிடும். இதை நாம் கடைகளில் கொடுத்து ரிப்பேர் செய்தால் செலவு அதிகம் ஆவதுடன், அதன் பயன்பாடு பழையது போல் சிறப்பாக இருக்காது. இதனால் குறைந்தது மாதம் ஒரு முறையாவது மெஷினை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அவ்வளவு சுலபமாக நம்மால் வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய முடியாது.
உங்களின் வேலையை எளிதாக்க, இந்த பதிவை படித்து, பயனுள்ள சில டிப்ஸ் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் எந்த பொருளையும் அதிக விலை கொடுத்து வாங்க தேவை இல்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து வாஷிங்மெஷினை எளிதாக சுத்தம் செய்து விடலாம். இதற்க்கு முதலில், 2 கப் வினிகரை வாஷிங் மெஷின் டிரம்மில் ஊற்றிவிடுங்கள். இப்போது, வாஷிங் மெஷினை அதிக ஸ்பீடில் ஒரு முறை இயக்க வேண்டும். பின்னர், அதே போல் அரை கப் பேக்கிங் சோடாவை வாஷிங் மெஷின் டிரம்மில் போட்டு, மறுபடியும் அதிக ஸ்பீடில் ஒரு முறை இயக்க வேண்டும். இதனால் வாஷிங் மெஷினில் இருக்கும் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை எளிதில் சுத்தம் செய்து விடும்.
இதற்க்கு பதில் நீங்கள், சூடான நீர் பயன்படுத்தலாம். சிறிதளவு சூடான நீரில், கிளீனிங் பவுடரை கலந்து அதை வாஷிங்மெஷினில் ஊற்றிவிடுங்கள். இப்போது மெஷினை அதிக ஸ்பீடில் ஒரு முறை இயக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வாஷிங் மிஷினில் படிந்திருக்கும் விடாப்பிடியான அழுக்குகள் சுலபமாக நீகங்கும். உங்களுக்கு ஹைட்ரஜன் பெராக்ஸைட் கிடைத்தால், அதை தண்ணீரில் கலந்து, அதில் ஒரு சுத்தமான துணியை முக்கி, வாஷிங் மெஷினின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் நன்கு துடைக்க வேண்டும். இதனால் மெஷினில் உள்ள கிரீஸ், பாசி, உப்பு நீர், அழுக்கு போன்ற அனைத்தும் சுலபமாக நீங்கி விடும்.
Read more: வீசிங் பிரச்சனையால் அவதிப்படுறீங்களா?? இனி கவலையே வேண்டாம்.. இதை மட்டும் செய்தால் போதும்..