For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்ய போறீங்களா?? அப்போ கண்டிப்பா இதை படியுங்க..

easy way to clean house
07:27 AM Jan 13, 2025 IST | Saranya
பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்ய போறீங்களா   அப்போ கண்டிப்பா இதை படியுங்க
Advertisement

பண்டிகைகள் வந்துவிட்டால், ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கவலையும் இருக்கும். குறிப்பாக, தமிழர்கள் விரும்பி கொண்டாடும் பண்டிகையான பொங்கல் வந்து விட்டால், இல்லத்தரசிகளுக்கு வேலை செய்தே பெண்டு கழண்டு விடும். அந்த அளவிற்கு வேலை அதிகமாக இருக்கும். இதனால், பலர் ஜனவரி மாத தொடக்கத்திலேயே வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவது உண்டு. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொங்கல் வேலையை செய்வது என்பது மிகப்பெரிய கடினமான ஒன்றாக இருக்கும்.

Advertisement

பொங்கல் நேரத்தில், வருடம் ஒருமுறை மட்டுமே வீட்டை சுத்தம் செய்வதால், வேலை மிகவும் கடினமாகி விடும். இதனால் முடிந்த வரை, வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாள் உங்கள் வீட்டை சுத்தம் செய்து வந்தால், உங்கள் வீட்டு எப்போதும் அழகாக இருப்பது மட்டும் இல்லாமல், பொங்கல் சமயத்தில் வீட்டை சுத்தம் செய்வது சுலபமாக இருக்கும். இந்நிலையில், இந்த வருடம் வீட்டை மிகவும் எளிதாக சுத்தம் செய்வது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. கட்டாயம் இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

சுத்தம் செய்ய முடிவு செய்து விட்டால், முதலில் வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை தனியாக எடுத்துவிடுங்கள். உதாரணமாக, கிச்சனில் உடைந்திருக்கும் பிளாஸ்டிக் டப்பா, பீரோவில் இருக்கும் பழைய டிரஸ், உடைந்துப்போன பிளாஸ்டிக் பொருள்கள் என அனைத்தையும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், உங்கள் வீட்டில் இருக்கும் திரைசீலையை (ஸ்க்ரீன்) கழற்றி துவைக்க போட்டு விடுங்கள். முதலாவது, வீட்டில் படிந்திருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்யுங்கள்..

பின்னர், கிச்சனில் இருக்கும் மசாலா பொருள்களை ஒரு கவரில் போட்டு வைத்து விட்டு, அந்த டப்பாக்களை கழுவி காய வைத்து விடுங்கள். இப்போது நீங்கள் நாள் தோறும் பயன்படுத்தும் துணிகள், பெட்ஷீட், தலையணை உறை என அனைத்தையும் துவைத்து விடுங்கள். இதைத்தொடர்ந்து, வீட்டில் இருக்கும் பாத்ரூமை முதலில் நன்கு சுத்தம் செய்து விட்டு, பின்னர் மற்ற அறைகளை தண்ணீர் வைத்து சுத்தம் செய்து விடுங்கள். உங்களுக்கு உதவி செய்ய ஆள் இருந்தால், இவை அனைத்தையும் ஒரே நாளில் முடித்து விடலாம். ஆள் இல்லாத பட்சத்தில், இதை பொறுமையாக 2-3 நாட்கள் எடுத்து பொறுமையாக செய்யுங்கள்.

Read more: எப்பேர்ப்பட்ட மாதவிடாய் பிரச்சனையாக இருந்தாலும் சரி, இனி நீங்க மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியமே இல்ல..

Tags :
Advertisement