உங்களின் பழைய அடுப்பு புதிது போல் ஜொலிக்க வேண்டுமா?? இதை மட்டும் செய்யுங்க.. நீங்களே ஆச்சர்யப்படுவீங்க..
நாம் கிச்சனில் தினமும் அதிகம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று அடுப்பு தான். நாம் அடுப்பை அதிகம் பயன்படுத்திக்கொண்டே இருப்பதால், அதில் எண்ணெய் திட்டுகள், உணவு மிச்சங்கள் போன்றவை அதில் ஒட்டிக்கொண்டு அடுப்பே அலங்கோலமாக மாறிவிடும். அவசரமான கால சூழ்நிலையில், பலர் அந்த அடுப்பை சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் அதில் உள்ள அழுக்குகள் விடாப்படியான கரையாக மாறிவிடுகிறது. அதனால் அவ்வப்போது கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இல்லையென்றால் அடுப்பின் செயல்பாடு குறைந்து விடும். மேலும், அழுக்குகள் மீது பல்லிகள் வர வாய்ப்புள்ளது. அந்த வகையில் அடுப்பின் மீது உள்ள எந்த விடாப்படியான கரையாக இருந்தாலும், எப்படி சுலபமாக நீக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
முதலில் அடுப்பைப் சுத்தம் செய்வதற்கு முன், அதில் துளியும் வெப்பம் இல்லாமல் நன்கு குளிரும் வரை காத்திருக்கவும். பின்னர், அடுப்பின் மீது ஒட்டி இருக்கும் உணவின் மிச்சங்களை மெதுவாக அகற்றவும். கடினமாக ஒட்டிக் கொண்டிருக்கும் மிச்சங்களை அகற்ற சோப்பு தண்ணீரை தெளித்து மென்மையான துணி பயன்படுத்தி தேய்கவும். அதற்க்கு பின்னர், அடுப்பின் க்ரில்லை அகற்றி, ஒரு அகலமான பாத்திரத்தில் சோப்பு தண்ணீரை ஊற்றி அதில் ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு, ஸ்டீல் ஸ்க்ரப் பயன்படுத்தி க்ரில்லை லேசாக தேய்த்தாலே எல்லா கரைகளும் நீங்கிவிடும்.
அதற்க்கு மேலும் கரை படிந்திருந்தால், அதனை அகற்ற அகற்ற பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். பின்னர், அவற்றை தண்ணீரில் அலசி நன்கு காயவைக்க வேண்டும். பின்னர் அதே போல், பர்ணர்களை சோப்பு நீரில் ஊறவைத்து, பிரஷ் பயன்படுத்தி கரைகளை அகற்றுங்கள். வெள்ளை வினிகரை பயன்படுத்தினால் பர்னரில் உள்ள எந்த விடாப்படியான கரைகளும் நீங்கி விடும். பின்னர் இதையும் நன்கு கழுவிய பின்னர் ஈரம் இல்லாதபடி உலர்த்த வேண்டும்.
இப்போது சோப்பு தண்ணீரை மென்மையான துணியில் நனைத்து அதனை அடுப்பின் மேல் மெதுவாக தேய்க்கலாம். கடினமான கரைகளை நீக்க பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். எண்ணெய் திட்டுகளை அகற்ற எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். பின்னர் அடுப்பை நன்றாகத் துடைத்து ஈரம் இல்லாமல் உலர்த்தவும். அடுப்பின் உட்புறத்தில் உள்ள தூசிகளையும், மிச்சங்களையும் சுத்தம் செய்யும் போது, எவ்விதமான திரவத்தையும் பயன்படுத்த வேண்டாம். இப்படி நீங்கள் வாரம் ஒருமுறை அடுப்பை சுத்தம் செய்தால் அடுப்பு எப்போது தூய்மையாக இருப்பதுடன். பல வருடங்கள் நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்..
Read more: பொரி சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை குறையுமா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..