அடிப்பிடித்த பால் பாத்திரத்தை சுலபமாக சுத்தம் செய்ய வேண்டுமா?? இந்த ஒரு பொருள் போதும்..
வீட்டில் கழுவ முடியாத ஒரு பாத்திரம் என்றால் அது பால் பாத்திரம் தான். அடுப்பு தீ சற்று அதிகம் இருந்தாலும் பால் பாத்திரம் அடிபிடித்து விடும். அப்படி, கடுமையாக அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. சற்று அதிகம் அடி பிடித்த பாத்திரத்தை ஒரு சிலர் தூக்கி எரிந்து விடுவது உண்டு. இன்னும் சிலர் அடிபிடித்த கரையை நீக்காமலே பயன்படுத்துவது உண்டு. ஆனால் நீங்கள் இனி கவலை பட வேண்டாம். அடி பிடித்த பாத்திரத்தை எப்படி சுலபமாக சுத்தம் செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இப்படி அடிபிடித்த பால் பாத்திரத்தில் தக்காளி சாஸினை ஊற்றி இரவு முழுவதும் அப்படியே ஊற வைத்து விடுங்கள். பின்னர் காலையில் அந்த பாத்திரத்தை கழுவினால் கரை நீங்கி உங்கள் பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும். தக்காளிக்கு பதில், நீங்கள் வினிகரை பயன்படுத்தலாம். அதற்கு முதலில், அடிபிடித்த பால் பாத்திரத்தில் மூன்று முதல் நான்கு சொட்டு வினிகரை ஊற்றி, ஊற வையுங்கள். கரை தானாக தளர்த்தப்படும். அதன் பின்னர் நீங்கள் பாத்திரத்தை எப்போதும் போல கழுவினால் பால் பாத்திரம் பளிச்சென்று மாறும்.
அடிபிடித்த பாத்திரத்தை உப்பு வைத்தும் சுத்தம் செய்யலாம். இதற்க்கு அடிப்பிடித்த பால் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதிக்கும் நீரில் சிறிது உப்பு சேர்த்து விடுங்கள். இதனால் எரிந்த கறை படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். பின் நீங்கள் எப்போதும் கழுவுவது போல் பாத்திரத்தை கழுவினால் பாத்திரம் பளபளப்பாக இருக்கும். இதற்கு எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். இதற்கு முதலில் எலுமிச்சை சாற்றினை எடுத்து அதை அடிபிடித்த பாத்திரம் முழுவதும் நன்றாக தேய்த்து விடுங்கள். சுமார் ஒரு மணி நேரம் கழித்து பாத்திரத்தை கழுவினால் பாத்திரம் பளிச்சென்று மாறிவிடும்.
Read more: “லிப் லாக் காட்சி இருந்தால், படத்தில் நடிக்க மாட்டேன்”; பிரபல நடிகையின் கொள்கையை புகழும் ரசிகர்கள்..