இதை மட்டும் செய்யுங்க; உங்க தலையில் எத்தனை பேன் இருந்தாலும், 1 மணி நேரத்தில் உதிர்ந்து விடும்!!
பலருக்கு நீண்ட அடர்த்தியான தலைமுடி வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இருக்கும் தலைமுடியை முறையாக பராமரிக்க மாட்டார்கள். இதனால் அவர்களின் தலைமுடியில் ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை சேர்ந்து விடும். இதன் விளைவாக தலையில் பேன் வர ஆரம்பித்து விடும். தலையில் பேன் இருப்பது என்பது பெரும் கொடுமையான விஷயம். ஆம், தலையில் பேன் இருக்கும் போது நாம் பெரும்பாலும் தலையை சொறிய நேரிடும். இதனால் நமது கைகள் கட்டாயம் சுத்தமாக இருக்காது. அசுத்தமான கைகளால் செய்யப்படும் உணவுகள் கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்காது.
மேலும், மற்றவர்கள் முன் நாம் தலையை சொறிவதால் அது அவர்களுக்கு அருவருப்பாக தோன்றும். நமது முடிகளில் அழுக்கு சேரச் சேர அந்த இடம் பேன்கள் வசிக்க ஏற்ற இடமாக மிகவும் வசதியாக பேன்களுக்கு அமைந்துவிடுகிறது. வயிற்றில் பூச்சி வந்தால் நாம் மருந்து எடுத்துக் கொள்வது போல, தலைகளில் ஒட்டுண்ணி வகை பேன் வந்தால், அதற்கான மருத்துவத்தை எடுத்து கட்டாயம் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். ஆம், ஆலிவ் ஆயிலை முடிகளில் படுமாறு தடவி, காற்றுபுகா வண்ணம் பாத் கேப் (Bath cap) கொண்டு கவர் செய்ய வேண்டும்.
உங்களிடம் பாத் கேப் இல்லை என்றால் நீங்கள் ஒரு பழைய துண்டை பயன்படுத்தி தலையை கட்டிக்கொள்ளலாம். இப்படி செய்யும் போது, முடியை விடாமல் இறுகப் பற்றி, ஒட்டியிருக்கும் முட்டைகளின் பிடிமானத்தை ஆலிவ் ஆயில் தளர்த்தி வெளியே கொண்டு வரும். ஆலிவ் ஆயில் உங்களிடம் இல்லை என்றால், நீங்கள் எலுமிச்சைச் சாறு மற்றும் வெங்காயச் சாறை சம அளவில் எடுத்து, அதை பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு தடவ வேண்டும். பின்னர் பாத் கேப்பில் கவர் செய்துவிட்டால், அதன் வாடை தாங்காமல், முடியினை அலசும்போது பேன்கள் தானாகவே உதிர்ந்து விடும்.
அதேபோல் வெள்ளை மிளகுடன் பால் அல்லது காட்டு சீரகத்துடன் பாலை தலையில் தடவி பாத் கேப் போட்டுவிடுங்கள். பின்னர் ஒரு மணி நேரத்தில் தலையை அலசி சுத்தம் செய்தால் பேன் தொல்லையில் இருந்து உடனடியாக விடுபடலாம். இதனால் கூந்தலின் அழகில் மட்டும் கவனம் செலுத்தாமல் சுத்தமாக வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துங்கள்.