வெறும் வயிற்றில் இந்த தண்ணீர் குடிங்க; நீங்க ஆசைப்படுற மாதிரி ஸ்லிம்மா இருக்கலாம்..
ஆயிரக்கணக்கில் செலவு செய்து கண்ட மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நாம், நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் மசாலா பொருட்களை முறையாக பயன்படுத்தவில்லை என்று சொல்லலாம். நாம் சுவைக்காக சேர்க்கும் ஒவ்வொரு மசாலா பொருள்களிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் தான் நமது முன்னோர் அந்த பொருள்களை உணவில் சேர்த்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு மசாலா பொருள்களின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியாததால் தான் பல பிரச்சனை. கிச்சனில் இருக்கும் மசாலா பொருள்களை நாம் முறையாக பயன்படுத்தி வந்தால் பல நோய்களுக்கு மருந்து சாப்பிட வேண்டிய தேவையில்லை.
அந்த வகையில் பல மருத்துவ குணம் கொண்ட மசாலா பொருள்களில் ஒன்று தான் பெருஞ்சீரகம். பொதுவாக ஹோட்டலில் சாப்பிட்ட பின், பெருஞ்சீரகத்தை வாய் பிரெஷ்னராக பயன்படுத்துவோம். ஆனால், பெருஞ்சீரகத்தை சாப்பிட்ட உடன் சாப்பிடுவதால் இனிப்புக்கான ஏக்கத்தை தணிக்கவும், உணவு விரைவில் ஜீரணிக்கவும் உதவுகிறது. மேலும், கூடுதலாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும். இந்நிலையில், பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அஜீரணம், வாயு, வயிற்று வீக்கம் போன்ற எந்த செரிமான பிரச்சனையும் வராது. பெருஞ்சீரகத்தில் அதிகளவு வைட்டமின் ஏ இருப்பதால் அது கண் பார்வையை அதிகரிக்க செய்யும்.
இதனால் கண்களில் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் பெருஞ்சீரக நீர் குடிப்பது நல்லது. பெருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துவிடும். பெருஞ்சீரகத்தில் பசியின்மை போக்கும் பண்புகள் உள்ளன. இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலை வெறும் வயிற்றில் டீ அல்லது காபிக்கு பதில் பெருஞ்சீரக தண்ணீர் குடிக்கலாம். இதனால் நம் உடலில் இருக்கும் மெடபாலிஸத்தை துரிதப்படுத்தி, உடல் எடை குறைக்க பெரிதும் உதவும்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வாரம் 2 முறையாவது பெருஞ்சீரக தண்ணீரை குடியுங்கள்..
Read more: பரம்பரையாக ஏற்படும் புற்றுநோயை தடுக்க முடியுமா?? நிபுணர் அளித்த அதிர்ச்சி தகவல்..