தூசி பறக்காமல், சுலபமாக சீலிங் Fan-ஐ சுத்தம் செய்ய ஈஸியான டிப்ஸ்!!!
என்ன தான் நாம் வீட்டை நாள்தோறும் சுத்தமாக வைத்திருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் நாம் சீலிங் பேனை சுத்தம் செய்ய மறந்துவிடுவோம். விஷேச நாட்களில் வந்தால் தான் நமக்கு பேனில் இருக்கும் தூசியே கண்ணுக்கு தெரியும். அப்படி பேனில் அதிகப்படியான தூசி படிந்திருக்கும் போது, சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முடிந்த வரை பேனில் தூசி படியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் பேனை அவ்வளவு சுலபமாக சுத்தம் செய்து விட முடியாது. இதனால் தான் பாதி பேர், பேனை சுத்தம் செய்வதே இல்லை. ஆனால் பேனை ஈஸியாக சுத்தம் செய்வதற்கான டிப்ஸை, இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சீலிங் பேனை சுத்தம் செய்வதற்கு முன்பு, வீட்டில் இருக்கும் பழைய தலையணை உறையை எடுத்துகொள்ளுங்கள். அதற்கு முன்பு, உங்கள் முகத்தில் கட்டாயம் முகக் கவசம் அணிந்துக் கொள்ளுங்கள். பின்னர், சீலிங் பேனின் இறக்கைகளை தலையணை உறையால் கவர் செய்து, இறுக்கமாக அந்த உறையை இறக்கையை சுத்தம் செய்யுமாறு பிடித்துக்கொண்டு மெதுவாக உறையை வெளியே இழுங்கள். தற்போது சீலிங் பேனின் இறக்கைகள் மீது இருக்கும் தூசிகள் தலையணை உறைக்குள் இருக்கும். இதனால் வீடு முழுவதும் தூசி பறக்காது.
ஒரு வேலை உங்களிடம் வேக்யூம் கிளீனர் இருந்தால் நீங்கள் அதை வைத்து உங்களுடைய சீலிங் பேனை சுத்தம் செய்யலாம். பெரிய குச்சியில் வேக்யூம் கிளீனரை இணைத்து, சீலிங் பேனை சுத்தம் செய்யலாம். இல்லையென்றால், உங்கள் வீட்டில் இருக்கும் பழைய சாக்ஸை தண்ணீரில் நனைத்து, அதை சீலிங் பேனின் இறக்கை மீது வையுங்கள். இப்போது சாக்ஸின் இரண்டு முனைகளையும், தங்களது இரு கைகளால் பிடித்துக்கொண்டு மெதுவாக தூசியை சுத்தப்படுத்துங்கள். இதனால் உங்கள் பேன் புதுசு போல் மாறிவிடும். இது வரை சீலிங் பேனை சுத்தம் செய்ய நீங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருந்தீர்கள் என்றால், இந்த டிப்ஸ் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
Read more: எமனாக மாறும் கொலஸ்ட்ரால்!! மருந்தே இல்லாமல் குறைக்க, சிறந்த வழி இது தான்..