தீராத கழுத்து வலியால் அவதியா? தினமும் ‘இதை’ குடிங்க.. கண்டிப்பா ரிசல்ட் தெரியும்!
பல மணி நேரம் ஒரே இடத்தில வேலை செய்யும் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை கழுத்து வலி. இந்த பிரச்சனை வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கும் அதிகம் இருக்கும். இதற்க்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடு தான். இதனால் கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதே சமயம் சந்தையில் விற்கப்படும் கண்ட மருந்துகளை வாங்கி உங்கள் மென்மையான தோலில் பூசாமல், உடம்பிற்குள் ஏற்படும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் இந்த தண்ணீரை தினமும் குடித்துப் பாருங்கள்.
இதற்க்கு முதலில், 100 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனை மிதமான சூட்டில் நீரை கொதிக்க வைக்க வேண்டும். மேலும் இதனுடன் 20 கிராம் சித்தா முட்டி வேர், ஒரு கைப்புடி அளவு நொச்சி இலை மற்றும் 20 கிராம் தழுதாழை ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், 100 மி.லி நீர் 50 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். இப்போது அந்த நீரை வடிகட்டி தினமும் குடித்து வந்தால் தீராத கழுத்து வலிக்கு கண்டிப்பாக நிரந்தர தீர்வு கிடைக்கும்.
Read more: வெறும் வயிற்றில் இந்த தண்ணீர் குடிங்க; நீங்க ஆசைப்படுற மாதிரி ஸ்லிம்மா இருக்கலாம்..