இனி ஈஸியா Gmail அனுப்ப முடியாது!… புதிய விதிகளை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!
Gmail: இன்றுமுதல் அமலுக்கு வரும் புதிய ஜிமெயில் விதிகளை பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், புதிய அங்கீகாரத் தேவைகளை பூர்த்தி செய்யாதை பல்க் செண்டர்களால் (Bulk Senders) அனுப்பப்படும் இமெயில்கள் ஆனது கூகுள் நிறுவனத்தால் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜிமெயில் பயனர்களின் இன்பாக்ஸிற்கு (Gmail Inbox) வரும் ஸ்பேம் இமெயில்களின் அளவை குறைப்பதோடு (Reduce Spam emails Count) சேர்த்து, ஜிமெயில் பயனர்களின் பாதுகாப்பை (Security) மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டே கூகுள் நிறுவனம் இந்த கடுமையான விதியை நடைமுறைப் படுத்தி உள்ளது.
24 மணி நேரத்திற்குள் தனிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களுக்கு 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பும் எவருமே பல்க் செண்டர்கள் தான் என்று கூகுள் நிறுவனம் வரையறை செய்கிறது. எத்தனை துணை டொமைன்கள் பயன்படுத்தப்பட்டாலும், ஒரே முதன்மை டொமைனில் இருந்து அனுப்பப்படும் அனைத்து இமெயில்ககளும் இதில் அடங்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்படியாக ஒருமுறை பல்க் செண்டர் என்கிற ஸ்டேட்டஸை பெற்றுவிட்டால், அதற்கு எந்த விதமான காலாவதி தேதியும் இல்லாததால், அது நிரந்தரமாகி விடும். அதாவது ஒருவர் ஒருமுறை பல்க் செண்டர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டால் அவர் எப்போதுமே ஒரு பல்க் செண்டர் என்று தான் அடையாளம் காணப்படுவார் என்று அர்த்தம்! முன்னரே குறிப்பிட்டுள்ளபடி, பல்க் செண்டர் வழிகாட்டுதல்கள் (Bulk Sender Guidelines) ஆனது தனிப்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களுக்கு அனுப்பப்படும் இமெயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும் கூட, அனைத்து அனுப்புநர்களும் கூகுளின் புதிய விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். இதில் கூகுள் வொர்க்பிளேஸ் (Google Workspace) அக்கவுண்ட்களை பயன்படுத்துபவர்களும் அடங்குவர்!
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கடுமையான டொமைன் அங்கீகார விதிகளும் (Strict Domain Authentication Rules) அமலுக்கு வரும். ஜிமெயிலின் க்ரூப் ப்ராடெக்ட் மேனேஜர் ஆன நீல் குமரன் பல பல்க் செண்டர்கள் தங்களின் சிஸ்டம்களை சரியான முறையில் செக்யூர் மற்றும் கான்ஃபிகரேஷன் செய்யவில்லை. இதனால் அட்டக்கர்களால் எளிதாக தங்களை மறைந்து கொள்ள முடிகிறது என்கிறார்.
இதனால்தான், ஏப்ரல் 1 முதல், பல்க் செண்டர்கள் அனைவரும் தங்கள் இமெயிலை "சிறந்த நடைமுறைகளைப்" பயன்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். அதாவது டொமைன் அடிப்படையிலான மெசேஜ் அங்கீகாரம் (Domain-based Message Authentication), ரிப்போர்டிங் மற்றும் கன்ஃபார்ம்மென்ஸ் (Reporting & Conformance), டொமைன்கீஸால் அடையாளம் காணப்பட்ட மெயில் (DomainKeys Identified Mail) மற்றும் செண்டர் பாலிசி ஃப்ரேம்வொர்க் (Sender Policy Framework) போன்ற சிறந்த நடைமுறைகளை பயன்படுத்த வேண்டும்.
ஜூன் 1 முதல் இன்னொரு புதிய ஜிமெயில் விதியும் நடைமுறைக்கு வரும்! மேற்கண்ட புதிய ஜிமெயில் விதிகளை தவிர்த்து 2024 1 ஜூன் ஆம் தேதி முதல் பல்க் செண்டர்கள் அனைவரும் ஒரே கிளிக்கில் அன்சப்ஸ்க்ரைப் செய்யும் விருப்பத்தை (One-click unsubscribe option) சேர்க்க வேண்டும். மெயிலிங் லிஸ்ட்டில் (Mailing List) இருந்து அன்சப்ஸ்க்ரைப் முயற்சிக்கும் எவருக்குமே, அது மிகவும் சுலபமான செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் நோக்கமாகும். மேலும் ஜூன் 1 முதல் பல்க் செண்டர்கள் தங்களுக்கு வரும் அன்சப்ஸ்க்ரைப் கோரிக்கைகளை (Unsubscribe requests) 48 மணி நேரத்திற்குள் செயல்படுத்த வேண்டும்!
Readmore: இன்று முதல் Paracetamol உள்ளிட்ட மாத்திரைகளின் விலை உயர்வு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!