For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Easter: இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள்!… புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாட்டம்!

07:33 AM Mar 31, 2024 IST | Kokila
easter  இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் … புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாட்டம்
Advertisement

Easter: கிறிஸ்துவர்கள் அனைவரும் மீண்டும் உயிர்த்தெழுந்தது போன்ற சந்தோஷத்தைப் பெறக்கூடிய நாளாக ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சிலுவையில் அறைந்த போதும் மக்களின் நலனுக்காக அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார் இயேசு கிறிஸ்து. என்ன தான் சிலுவையில் அறைந்தாலும், மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற மக்களின் நம்பிக்கைகயை ஏற்ப புனித வெள்ளிக்கு அடுத்த 3 ஆம் நாள் இயேசு உயிர்த்தெழுகிறார். இந்த நிகழ்வைத் தான் உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு கிறிஸ்துவர்களும் ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

Advertisement

கி.பி. 29 ஆம் ஆண்டிலிருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர் என்கிறது வரலாறுகள். ஆனாலும் கி.பி. 325 லிருந்து அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்தது தான் ஈஸ்டர் பண்டிகை மிகவும் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற வரலாறுகள் என்ன இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்துடன் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை வரவேற்கின்றனர்.

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் முடிந்துவிட்டது. இதையொட்டி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி அன்று அனுசரிக்கப்பட்டது. 3-வது நாள் அவர் உயிர்த்தெழுவார் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கத்தோலிக்க திருச்சபைகளில் நேற்று இரவே ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு தொடங்கியது. தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபைகளில் நேற்று இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் சி.எஸ்.ஐ., பெந்தெகொஸ்தே, இ.சி.ஐ., லுத்ரன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு திருச்சபைகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் ஆயர்கள் இயேசு உயிர்த்தெழுந்தது குறித்த சிறப்பு செய்தியை வழங்குவார்கள்.

இதையொட்டி ஆலயங்கள் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. ஈஸ்டர் வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து வழிபாடு முடிந்ததும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Readmore: Napkin: குட்நியூஸ்!… ஒரு ரூபாய்க்கு காட்டன் நாப்கின்!… ஒரு பாக்கெட்டில் 10 பேட்ஸ்!… விலை, எங்கு கிடைக்கும் முழுவிவரம் இதோ!

Tags :
Advertisement