For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Earthquake: சுனாமி எச்சரிக்கை?... அதிபயங்கர நிலநடுக்கம்!... ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவு!

09:38 AM Mar 24, 2024 IST | Kokila
earthquake  சுனாமி எச்சரிக்கை     அதிபயங்கர நிலநடுக்கம்     ரிக்டர் அளவில் 6 9ஆக பதிவு
Advertisement

Earthquake: இந்தோனேசிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

பப்புவா நியூகினியாவில் அம்புண்டி என்ற பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. அதாவது அம்புண்டியில் வடகிழக்கு பகுதியில் 32 கி.மீ. தொலைவில் 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

இதுவரை எந்தவித உயிர் பாதிப்பும் பொருட் சேதமும் ஏற்படவில்லை. பப்புவா நியூ கினியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பப்புவா கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்தது. இதனால் 7 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore:  வாக்காளர் அட்டை இல்லையா?… இந்த 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!… தேர்தல் ஆணையம்!

Tags :
Advertisement