BREAKING: இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கம்…!
மிசோரம் மாநிலம் லங்லை என்ற பாகுதியில் இன்று காலை7.18 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் (National Center for Seismology) அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் "மிசோரம் மாநிலம் லங்லை பகுதியில், இன்று காலை 7.18 மணியளவில், ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது Lat: 22.86 & நீளம்: 92.63, ஆழம்: 10 கிமீ" எனவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பலத்த சேதம் மற்றும் உயிரழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியிலும் ரிக்டர் அளவில் 3.9 என்ற நிலநடுக்கம் பதிவாகியிருந்த நிலையில் தற்போது மிசோரத்தில் நில அதிர்வு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.