செங்கல்பட்டில் நில அதிர்வு..!! பீதியில் அலறியடித்து ஓடிய மக்கள்..!!
செங்கல்பட்டு நகரத்தை மையமாக வைத்து இன்று காலையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. காலை 7.30 மணியளவில் பெங்களூர் அருகே விஜயபுராவிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள அஞ்சூர், புளிப்பாக்கம், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
முன்னதாக கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் காலை 6.58 மணிக்கு 3.2 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டிலும், ஆம்பூரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. காலை 7.39 மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு 3.2 ரிக்டர் அளவு கோலில் பதிவானது.
நில அதிர்வு காரணமாக அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடினர். நிலநடுக்கத்திலும் பொருள் சேதங்களும், உயிர் சேதங்களும் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.