திக்!.திக்!. அமெரிக்காவில் நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு!. நேரடி செய்தி ஒளிபரப்பில் வெளியான வீடியோ!
Earthquake: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 4.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. செய்தி நேரடி ஒளிபரப்பின்போது ஸ்டியோ குலுங்கிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியாதவது, தெற்கு கலிபோர்னியாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் அதிகமாக உணரப்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பெரிய சேதமோ ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை நிலநடுக்கம் ஹைலேண்ட் பூங்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறத்திற்கு அருகில், மேற்பரப்பில் இருந்து சுமார் 7.5 மைல்கள் (12.1 கிலோமீட்டர்) கீழே மையம் கொண்டிருந்தது என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால், மருத்துவமனையின் கட்டிடம் குலுங்கியது மற்றும் பல இடங்களில் கண்ணாடிகள் மற்றும் பாத்திரங்கள் சத்தமிட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், நிலநடுக்கத்தால், ESPN லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோ நேரடி ஒளிபரப்பின் போது குலுங்கிய காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதலா?. லடாக்கில் பதற்றம்!. உண்மை என்ன?.