Earthquake: இந்தோனேசியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கையா..?
06:59 AM Apr 28, 2024 IST | Kathir
Advertisement
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் சனிக்கிழமை இரவு 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, என்று அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
சனிக்கிழமை இரவு (இந்தோனேஷியா நேரப்படி 23:29 மணிக்கு) 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன் மையப்பகுதி கருட் ரீஜென்சிக்கு தென்மேற்கே 151 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் அமைந்துள்ளதாக் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா, பான்டென் மாகாணம், மத்திய ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்களிலும் நிலநடுக்கத்தின் தீவிரம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஆன சேதாரங்கள் குறித்தும் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.