For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சீனா - டெல்லி வரை குலுங்கிய பூமி!... 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!... மக்கள் அச்சம்!

06:24 AM Jan 23, 2024 IST | 1newsnationuser3
சீனா   டெல்லி வரை குலுங்கிய பூமி     7 2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்     மக்கள் அச்சம்
Advertisement

சீனாவின் ஜின்ஜியாங்கில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், டெல்லி-என்சிஆர் வரை உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. 80 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியம் வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மட்டும் இன்றி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. கஜகஸ்தானில், அதே நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக அவசரகால அமைச்சகம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிர்ச்சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அதிர்வுகள், உஸ்பெகிஸ்தானிலும் உணரப்பட்டன. நள்ளிரவு சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். சீனாவில் வடமேற்கில் அமைந்துள்ல ஜின்ஜியாங் மாகாணம் மலைப்பகுதிகள் நிறைந்தது. பாலைவனங்களையும் கொண்ட இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இரவு இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி குலுங்கியது. 47 பேர் வரை இடிபாடுகளில் புதைந்ததாகவும் 200 க்கும் மேற்பட்டோர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் சீனவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் சமீப காலமாக இயற்கை பேரிடர்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அதி கனமழை போன்ற இயற்கை பேரிடர்களால் அந்த நாடு கடுமையான பாதிப்பை சமீப காலமாக எதிர்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement