For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பூமிக்கு மிக நெருக்கம்..!! அழிவு உறுதி..!! எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!!

ISRO chief Somnath has warned that there are lakhs of asteroids orbiting in this space, and if they collide with the earth, it will cause a huge disaster.
10:03 AM Jul 08, 2024 IST | Chella
பூமிக்கு மிக நெருக்கம்     அழிவு உறுதி     எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்
Advertisement

இந்த விண்வெளியில் பல லட்சம் சிறுகோள்கள் சுற்றி வரும் நிலையில், இவை பூமியில் மோதினால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் எச்சரித்துள்ளார்.

Advertisement

இஸ்ரோ வெற்றிகரமாக பல விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் சர்வதேச விண்வெளி ஆய்வில் இந்தியாவுக்கு என தனி இடம் இருக்கிறது. இதற்கிடையே, இப்போது இஸ்ரோ அடுத்த கட்டமாக asteroids எனப்படும் சிறுகோள்கள் குறித்த ஆய்வில் இறங்கியுள்ளன. பொதுவாக சிறுகோள் குறித்த ஆய்வுகளை அமெரிக்கா தான் அதிகம் மேற்கொள்ளும். சரியாக இன்னும் 14 ஆண்டுகளில் அதாவது 2038ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி சிறுகோள் ஒன்று பூமியை தாக்க 72% வரை வாய்ப்புள்ளதாக நாசா எச்சரித்திருந்தது. இந்நிலையில், இந்த சிறுகோள்கள் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்த சிறுகோள்கள் குறித்து இஸ்ரோ ஆய்வு நடத்துவதாகவும், பூமியை நெருங்கினாலும், அதை அழித்து பூமியை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 335 மீட்டர் பெரிதான 99942 அபோஃபிஸ் என்ற சிறுகோளை இப்போது கண்காணித்து வருகிறோம். இது பூமியைத் தாக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. இந்த சிறுகோள் 2029ஆம் ஆண்டு பூமிக்கு மிக நெருக்கமாக சுமார் 32,000 கிமீ அருகில் கடக்க உள்ளது. ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கினால் கூட அது பேரழிவை ஏற்படுத்தும்.

நாம் நமது கிரகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் 100 மீட்டர் விட்டமுள்ள சிறுகோள் நம்மைத் தாக்கினால் கூட அது பேரழிவை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த தேசமே அழிந்துவிடும். 2 கிமீ விட்டம் நம்மை தாக்கினால், முழு பூமியும் அழியும் ஆபத்து உள்ளது. வரும் காலத்தில் நம்மால் நிச்சயம் ஒரு சிறுகோள் மீது சாக்கெட்டை தரையிறக்க முடியும். அந்த சிறுகோள் பூமியில் தாக்கினால் என்ன ஆபத்து ஏற்படும் என்பதை ஆய்வு செய்து தற்காப்புக்குத் தயாராகலாம். விண்வெளியில் பல லட்சம் சிறுகோள்கள் உள்ளன. அதில் பெரும்பாலான சிறுகோள்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கிரங்களுக்கு நடுவே தான் உள்ளன. அளவு சிறியதாக இருந்தாலும், அவை வேகமாக பயணிப்பதால் பூமியில் மோதினால் மிக மோசமான பாதிப்பு ஏற்படும். எனவே, பூமியை பாதுகாக்க இது குறித்த ஆய்வு முக்கியமானதாக இருக்கிறது" என்றார்.

Read More : BREAKING | ”அண்ணனின் பிறந்தநாளன்றே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்”..!! கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்..!!

Tags :
Advertisement