தவெக தலைவர் விஜய்யின் நீட் எதிர்ப்பு பேச்சு..!! அண்ணாமலையின் ரியாக்ஷன்..!! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?
தவெக தலைவர் விஜய்யின் நீட் எதிர்ப்பு பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ”நீட் தேர்வு ஆதாரம் அடிப்படையில் தான் நாங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறோம். நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்ற வெள்ளை அறிக்கையினை தமிழக அரசு வெளியிட வேண்டும். எல்லாருக்கும் ஒரு கருத்து இருக்கும். அந்த வகையில் தான், விஜய் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். யார் என்ன வேண்டும் என்றாலும் சொல்லிகொள்ளட்டும். விஜயும் திமுக சார்ந்த அரசியலை கையில் எடுக்க போகிறார் என்றால் வெல்கம். நோ பிராபளம்.
திமுக சார்ந்த அரசியலை கையில் எடுத்தால் பாஜக மட்டும் தனித்து இருக்கும். எங்களுக்கு அது சந்தோஷம்தான். ஏனென்றால், எங்களுடைய இடத்தில் நாங்கள் விளையாட போகிறோம். விஜயும் திமுக எடுத்து இருக்கும் கொள்கை முடிவை சார்ந்து போகிறார் என்றால் போகட்டும். எங்களுடைய அரசியல் இன்னும் எளிமையாகிறது. ஏனென்றால் இங்கே பாருங்கள் பாஜக அரசியல் மட்டும் தனித்து இருக்கு. அது எங்களுக்கு இன்னும் சந்தோஷம். அரசியல் தலைவராக விஜய் பேசிய கருத்துக்கு நான் வரவேற்பு தான் தெரிவிப்பேன்.
ஏனென்றால் எங்களுடைய அரசியலுக்கு அது நல்லது. பாஜக வளர்ச்சிக்கு நல்லது தான். ஆனால், சராசரியான மனிதனாக அந்த கருத்தை பார்த்தேன் என்றால் அது சரியில்லாத கருத்து. இன்னும் கொஞ்சம் சயிண்டிபிக்காக பார்த்து சொன்னார் என்றால், சிறப்பாக இருக்கும் என்பது எங்களுடைய கருத்து. புதிய கல்விக்கொள்கை என்ன சொல்லியிருக்கிறது. குறிப்பாக மும்மொழி கொள்கை என்று இருக்கிறது. இதுவரைக்கும் மும்மொழி கொள்கை தான் இருந்துச்சு. இதனை திமுககாரர்கள் இல்லை என்று சொன்னால் தவறு.
இந்தியாவில் 2020 வரை இந்தி என்பது கட்டாய மொழி என்று தான் இருந்துச்சு. இதனை திமுக இல்லை என்று சொல்லலாம். ஆனால், 2020 வரை நாட்டில் இந்தி மொழி கட்டாயம் என்று தான் இருந்தது. இது தான் கல்வி கொள்கை. ஆனால், அதனை தமிழக அரசு பாலோ பண்ணாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போதுதான் முதன் முதலாக புதிய கல்விக் கொள்கையில் இந்தி படித்தால் படிங்க, இல்லையென்றால் வெறு மொழியை படியுங்கள் என்று ஆப்ஷனோடு வந்திருக்கிறது. இந்தி பிடித்தால் படிங்க.. இல்லையென்றால் மலையாளம் படிங்க.. என நாமே 3-வது மொழியை தேர்வு செய்துகொள்ளலாம்.
தமிழக கல்விக்கொள்கையில் உருது பள்ளிகளை அதிகமாக ஆரம்பிக்க வேண்டும். உருது டெக்ஸ்ட் புக்குகளை அதிகம் கொண்டு வர வேண்டும் என்று இருக்கிறது. இது உருதி திணிப்பு இல்லையா?.. இந்தி திணிப்பு எதிர்ப்பு என்று சொல்லும் திமுக, உருது திணிப்பை ஏன் எதிர்க்கவில்லை? புதிய கல்வி கொள்கையில் இருப்பதை அப்படியே திமுக அரசு கட் காப்பி பேச்ட் செய்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
Read More : ”வேல சொல்லியே கொல்றாங்க”..!! விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட ரோபோ..!!