முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஜூலை மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு & பாமாயில்...! அமைச்சர் கூறிய குட் நியூஸ்...!

Duvaram dal & palm oil in ration shops throughout the month of July...
07:05 AM Jul 06, 2024 IST | Vignesh
Advertisement

ஜுன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜுலை மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

இது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில்; அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதுவும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்ற பிப்ரவரி மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முற்றிலுமாக விநியோகிக்கப்படவில்லை. மே மற்றும் ஜுன் மாதங்களில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, கொள்முதல் செய்து அவர்கள் ஆட்சியில் போல் இல்லாமல் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எல்லோருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக 18.06.2024 அன்று விரிவாக அறிக்கை வெளியிட்டு மே மாதம் பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் ஜுன் மாதம் முழுதும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தேன். அதன்படி மே மாதத்திற்கான துவரம் பரும்பு மற்றும் பாமாயில் முற்றிலும் நகர்வு செய்யப்பட்டுக் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிட்டன. 27.06.2024 அன்று உணவுத்துறை மானியக் கோரிக்கையின் போதும் இதுபற்றிக் குறிப்பிட்டு ஜுன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜுலை மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தேன்.

அதன்படி அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜூன் மற்றும் ஜுலை மாதங்களுக்குத் துவரம் பருப்பும் பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தெரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே கழக அரசு மீது வீண்பழி சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் தன் ஆட்சிக் காலத்தில் இரண்டு மாதங்கள் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் யாருக்கும் வழங்காமல் இருந்ததை எண்ணிப் பார்க்காமல் அனைவருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கி வரும் கழக ஆட்சியைப் பற்றிக் குறை கூறுவது அழகா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
palm oilrationration shoptn government
Advertisement
Next Article