அதிர்ச்சி...! ஷாக் அடிக்கும் துவரம் பருப்பு விலை...! 1 கிலோ எவ்வளவு தெரியுமா...?
தமிழகத்தில் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.195 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட வகை உணவுப் பொருட்களுக்கான உரிமத் தேவைகள், இருப்பு அளவு மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளை அகற்றுவது குறித்த, 21.06.2024 மற்றும் 11.07.2024 தேதியிட்ட உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள துவரம் பருப்பு மற்றும் கொண்டக்கடலை இருப்பு அளவுகள் குறித்து கடந்த வாரம் மத்திய அரசு விவாதித்தது. அதிக அளவில் பருப்பு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களில் துவரம்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விற்பனைக்கு தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில் தற்போது வெளி சந்தைகளில் துவரம் பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துவரம்பருப்பு விலை கடந்த ஓராண்டில் 15 முதல் 20% வரை அதிகரித்து கிலோ 200 ரூபாயை தொடவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.140 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் ரூ. 160 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் துவரம் பருப்பு ஒரு கிலோ தற்போது ரூ. 195 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.