அடேங்கப்பா.! குளிர் காலத்தில் சிறு துண்டு வெல்லம் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
குளிர் காலம் வந்து விட்டாலே உடல் நல பாதிப்புகளும் கைகோர்த்து வந்து விடும். இந்தக் குளிர் காலத்தில் நம் உடலை பாதுகாத்துக் கொள்ளவும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் உண்ணும் உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். இதன் மூலம் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். குளிர் காலத்தில் தொடர்ந்து வெல்லம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்க இருக்கின்ற நன்மைகள் பற்றி பார்ப்போம்.
கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து வெள்ளம் சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மேலும் இவற்றில் இருக்கும் வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இந்த நாள் குளிர் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் இருமல் போன்றவை வராமல் தடுக்கிறது. வெல்லத்துடன் நெய் கலந்து சாப்பிட்டு வர செரிமான கோளாறுகள் மற்றும் அமிலத்தன்மை நீங்கும்.
இதில் இரும்புச் சத்து இருப்பதோடு உணவிற்குப்பின் சிறிது துண்டு வெல்லம் சாப்பிடுவது நம் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. வெல்லத்துடன் உலர் திராட்சை மற்றும் தூதுவளை கலந்து தயாரிக்கப்படும் கசாயம் குளிர்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் இருமல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும். காலை உணவிற்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவது நம் உடலை சுறுசுறுப்பாக்குவதோடு இரத்த ஓட்டத்தையும் சீர் செய்கிறது. இது குளிர் காலங்களில் காலையில் ஏற்படும் மந்தத் தன்மையை போக்க உதவுகிறது.