சோதனையின் போது வருமான வரித்துறையினர் அச்சுறுத்தலில் ஈடுபட்டனர்...! அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு...!
சோதனையின் போது வருமான வரித்துறையினர் அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக அமைச்சர் எ.வா.வேலு பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
திருவண்ணாமலை சென்னை உட்பட மொத்தம் 30 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் எ.வா.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையானது நேற்று நிறைவு பெற்றது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சோதனையின் போது வருமான வரித்துறையினர் அச்சுறுத்தலில் ஈடுபட்டனர், அதிகாரிகளை குறை கூற விரும்பவில்லை, அம்பு எய்தவர்கள் எங்கோ உள்ளனர்.
எங்களை முடக்குவதற்காகவே இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. எனக்கு தொடர்புடைய இடங்களில் ஒரு பைசா கூட அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை. எங்களை பொறுத்தவரை நாங்கள் சட்டப்படி நடந்துகொள்வோம். இந்த சோதனையின் காரணத்தினால் தனது அரசாங்க பணிகளை செய்ய முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு உதவியாளர் நிர்பந்திக்கப்பட்டார். கேள்வி கேட்பது தவறல்ல, ஆனால் அவர்கள் கேட்கும் கேள்வி அனைத்தும் அச்சுறுத்தும் விதமாக இருந்தது.நேர்மையாக சம்பாதித்த பணத்தை கொண்டே அறக்கட்டளை, கல்வி நிறுவனங்களை உருவாக்கினேன்.