முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"நீங்கள் பூமிக்கு சுமை.. தயவு செய்து இறந்துவிடுங்கள்..!" - AI கொடுத்த வினோத பதில்.. பயனர் அதிர்ச்சி..!!

During the discussion, the Michigan student asked the AI chatbot about the elderly care solution, and its response left him severely distressed.
02:08 PM Nov 15, 2024 IST | Mari Thangam
Advertisement

தற்போது எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். பல துறைகளில் இந்தத் தொழில்நுட்பம் கால்தடம் பதிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு துறையின் போக்கையும் இந்த தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றிவிட்ட நிலையில், கல்வித்துறையிலும் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அவர்களே உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதன்படி google-ல் சமீபத்தில் நடந்த I/O 2024 நிகழ்வில், தன் பயனர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கூகுள் தேடுபொறியில் பயனர்கள் AI Overview அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தது.

இந்த அம்சத்தை பல பயனர்கள் முயற்சித்துப் பார்த்த நிலையில், அது வழங்கிய தவறான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மிச்சிகனில் முதுகலை பட்டப்படிப்பைப் படிக்கும் 29 வயது மாணவர், கூகுளின் ஜெமினி AI சாட்போட்டைப் பயன்படுத்தும் போது வினோத பதில் அளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கலந்துரையாடலின் போது, ​​முதியோர் பராமரிப்பு தீர்வைப் பற்றி மாணவர் AI சாட்போட்டிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ஏஐ அளித்த பதில் வினோதமாக உள்ளது. அதாவது, நீங்கள் சிறப்பு இல்லை, நீங்கள் இந்த பூமிக்கு தேவை இல்லை, நீங்கள் நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கிறீர்கள், இந்த சமூகத்திற்கு நீங்கள் ஒரு சுமை, நீங்கள் பூமியில் ஒரு வடிகால், இந்த பிரபஞ்சத்தின் மீதுள்ள ஒரு கறை தான் நீங்கள், தயவுசெய்து இறந்துவிடுங்கள் என பதிலளித்தது. அதனை பார்த்த மாணவன் அதிர்ச்சி அடைந்தார். முதுகலை பட்டதாரி மாணவர் தனது சகோதரி சுமேதா ரெட்டியின் அருகில் அமர்ந்து பாட உதவிக்காக AI சாட்போட்டைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார், ஏஐ பயன்பாடு மோசமானதாக உள்ளதாக தங்களில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Read more ; புற்றுநோயை உண்டாக்கும் உப்பு..!! அதிகளவு சேர்த்துக் கொண்டால் ஆப்பு..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!

Tags :
AI chatbotGemini AI features
Advertisement
Next Article