ஒரு கோடி மரங்கள், வன விலங்குகள் மத்தியில் டும் டும் டும்..!! மகன் திருமணத்திற்கு அழைக்கும் முகேஷ் அம்பானி..!!
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் மற்றும் 100 பில்லியன் டாலர் பணக்கார கிளப்பில் இருக்கும் ஒரே இந்தியர் என்ற பெருமை உடைய முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கு, ராதிகா மெர்ச்சண்ட் என்பவருடன் திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நிலையில், தற்போது திருமண தேதி வெளியாகியுள்ளது.
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குறித்த அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. இருவரின் திருமணத் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், தற்போது வைரலான திருமண அழைப்பிதழின்படி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அதாவது Pre Weeding நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமணம் அம்பானி குடும்பத்தின் கோட்டையான குஜராத் மாநில ஜாம்நகரில் நடக்க உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக ஆனந்த் அம்பானி குஜராத் ஜாம்நகரில் தங்கி திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்பிளக்ஸ் கட்டும் பணிகளைக் கவனித்து வருகிறார். இந்தத் திருமண அழைப்பிதழ் அட்டையில் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் கையால் எழுதப்பட்ட குறிப்பு உள்ளது. குஜராத்தின் ஜாம்நகருக்குப் பயணம் செய்வதன் மூலம் ஆனந்த் அம்பானியின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் எங்கள் குடும்பத்தின் ஆரம்ப வாழ்க்கையை இணைக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண அழைப்பிதழில் Pre Weeding நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜாம்நகரில் அமைந்திருக்கும் ரிலையன்ஸ் கிரீன்ஸ்-ல் மார்ச் 1ஆம் தேதி நடக்க உள்ளது. 1997ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜாம்நகரில் மாபெரும் சுத்திகரிப்பு ஆலையைக் கட்டப்பட்டதில் இருந்து சுமார் 1 கோடிக்கும் அதிகமாக மரங்கள் நடப்பட்டுள்ளது. மேலும், ஜாம்நகரில் ஆசியாவின் மிகப்பெரிய மாம்பழ தோட்டம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தற்போது ஆனந்த் அம்பானி பல விலங்குகளைக் காப்பாற்றி வளர்த்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளில் எங்கள் குடும்பத்தின் முக்கியமான நினைவுகள் ஜாம்நகரில் உள்ளது. இயற்கை சூழ நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கிறோம் என முகேஷ் அம்பானி, நீதா அம்பானி கைகளால் எழுதியுள்ளனர்.