For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மன்னர் சார்லஸ் புற்றுநோய்.! அவசரமாக லண்டன் வந்த இளவரசர் ஹாரி..!! விரிசல்கள் சமரசமாகுமா.?

11:38 AM Feb 07, 2024 IST | 1newsnationuser4
மன்னர் சார்லஸ் புற்றுநோய்   அவசரமாக லண்டன் வந்த இளவரசர் ஹாரி     விரிசல்கள் சமரசமாகுமா
Advertisement

இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து அவரது மகன் ஹாரி அமெரிக்காவிலிருந்து தந்தையை பார்ப்பதற்காக லண்டன் வந்திருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்து இருக்கிறது.

Advertisement

இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் கடந்த மாதம் ப்ரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்தபோது, அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தது. மேலும் மன்னர் சார்லஸ் எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை பற்றிய தகவல்கள் அறிவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மன்னர் சார்லஸ் அவரது அனைத்து அலுவலகப் பணிகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஓய்வு எடுப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த இளவரசர் ஹாரி அமெரிக்காவிலிருந்து அவசரமாக புறப்பட்டு லண்டன் வந்திருக்கிறார். இந்தப் பயணத்தின் போது அவரது மனைவி மேகன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு புற்றுநோய் இருப்பது உறுதியான பின்னர் தனது இரு மகன்களையும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட மன்னர் சார்லஸ், தனது நோய் குறித்து அவர்களுடன் பகிர்ந்து கொண்டதாக அரண்மனை தகவல்கள் தெரிவித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஹாரி அமெரிக்காவிலிருந்து அவசரமாக புறப்பட்டு லண்டன் வந்தடைந்திருக்கிறார். இந்தப் பயணத்தின் போது அவரது மனைவி மேகன் மற்றும் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் ஆகியோர் வரவில்லை என அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னர் சார்லஸின் புற்றுநோய் தொடர்பான தகவல் வெளியான 24 மணி நேரத்திற்குள், ஹீத்ரோ விமான நிலையத்தை அடைந்த ஹாரி மதியம் 2.42 மணியளவில் கிலரன்ஸ் ஹவுஸ் வீட்டை அடைந்ததாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹாரியின் வருகை மன்னரின் உடல்நலம் குறித்த கவலைகளை உருவாக்கக்கூடும். எனினும் அவர் லண்டன் வந்திருப்பது குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வரும் என அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டன் அரசு குடும்பம் தற்போது இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்வதால் ஹாரி மற்றும் மன்னர் சார்லஸ் குடும்ப விவகாரங்களில் சமரசம் செய்து கொள்வார்கள் என்று மன்னர் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் டியூக் ஹாரி நீண்ட நாட்களாக தனது சகோதரர் இளவரசர் வில்லியம்சுடன் ஏற்பட்ட விரிசல்களை இந்த காலகட்டத்தில் சமரசம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement