நேபாளத்தை உலுக்கிய வெள்ளம், நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு..!! தற்போதைய நிலவரம் என்ன?
கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. கவ்ரெபலன்சவுக் மாவட்டம் தான் மிக அதிமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைநகர் காத்மாண்டுவில் வெள்ளப்பெருக்கு மட்டும் அல்லாது, சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தற்போதுவரை 132 பேர் பலியாகியுள்ளனர் என்றும் மீட்புப் பணிகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஆயுதப்படை (APF) மற்றும் நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, 68 பேரை காணவில்லை என்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில், “காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாள ராணுவம், காவல்துறை, துணை ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மக்கள் அவசியம் இன்றி வெளியே பயணிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார். மேலும், இரவு நேரங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
Read more ; இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் ஏபி சிங் நாளை பதவி ஏற்பு..!!