For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உலகின் 8-வது கண்டம் கண்டுபிடிப்பு..!! புதிதாய் உருவான ப்ரோட்டோ மைக்ரோ கண்டம்! - விஞ்ஞானிகள் தகவல்..

Scientists Discover New Microcontinent Between Canada and Greenland
07:31 AM Jul 12, 2024 IST | Mari Thangam
உலகின் 8 வது கண்டம் கண்டுபிடிப்பு     புதிதாய் உருவான ப்ரோட்டோ மைக்ரோ கண்டம்    விஞ்ஞானிகள் தகவல்
Advertisement

டெக்டோனிக் பரிணாம வளர்ச்சியின் காரணமாக டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்ற புதிய கண்டம் உருவாகியுள்ளது.

Advertisement

மேற்கு கிரீன்லாந்து பகுதியில் உள்ள ஜலசந்தியின் டெக்டோனிக், பரிணாம வளர்ச்சியின் காரணமாக நிலபரப்பாக உருவாகியிருக்கிறது. இந்த புதிய கண்டத்திற்கு டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிய கண்டம் உருவானது எப்படி? தெரிந்துக் கொள்வோம். டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம், புதிய கண்டமாக இருந்தாலும், இது அளவில் மிகவும் சிறியது. எனவே, இதனை ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்று வகைப்படுத்தியுள்ளனர்.

பூமியின் மேல்தட்டுகளின் இயக்கம் இயற்கை நிகழ்வுகளால் ஏற்படுகின்றன. கனடா மற்றும் கிரீன்லாந்து இடையே உள்ள பூமியின் மேல்தட்டு, டேவிஸ் ஜலசந்தியை உருவாக்குகிறது. இந்த ஜலசந்தியின் டெக்டோனிக் பரிணாமம் 33-61 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பேலியோஜீன் காலத்தில் இருந்தது. இதன் விளைவாக ஒரு அசாதாரண நிலபரப்பு உருவானது என்று கூறப்படுகிறது. இந்த பரிணாம வளர்ச்சியின் காரணமாக கடலில் கான்டினென்டல் மேலோடு, இயல்பை விட தடிமனானதாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த ப்ரோட்டோ-மைக்ரோ கண்டத்தின் உருவாக்கம், முக்கியமாக 49-58 மில்லியன் காலகட்டத்துடன் இணைக்கப்பட்டது. கனடாவிற்கும் கிரீன்லாந்திற்கும் இடையில் பரவியிருக்கும் கடற்பரப்பின் நோக்குநிலை மாற்றப்பட்டு, டேவிஸ் ஜலசந்தியின் ப்ரோட்டோ-மைக்ரோ கண்டத்தில் இருந்து பிளவுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more | சாட்டை துரைமுருகன் வழக்கு… கருணாநிதி பேசியதை அம்பலப்படுத்திய அண்ணாமலை…!
Tags :
Advertisement