கனமழை எதிரொலி | இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் அவலாஞ்சியில் 91 செ.மீ. மழை கொட்டியிருக்கிறது. இதற்கிடையே, மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடஙகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.
Read more ; வங்காளதேச வன்முறை : நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்..!! 100-யை கடந்த பலி எண்ணிக்கை!!