For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கனமழை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கால்லூரிகளுக்கு நாளை விடுமுறை…!

09:20 PM Nov 14, 2023 IST | 1Newsnation_Admin
கனமழை  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கால்லூரிகளுக்கு நாளை விடுமுறை…
Advertisement

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று தொடங்கிய கனமழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது.

Advertisement

மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில்காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 16-ம் தேதி நிலவக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக நாளை (15.11.2023) சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கிப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் நாளைய தினம் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளநிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்டுகிறது. இருப்பினும், தற்போது வரை எந்த ஒரு ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement