1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் டிசம்பர் 31-ம் தேதி விடுமுறை...! ஆசிரியர்களுக்கு கிடையாது...
உத்தரபிரதேசத்தில் அதிக குளிர் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் கடுமையான குளிர் காரணமாக மக்கள் வெளியே செல்ல சிரமமாக உள்ளது. இந்த நிலையில் ஜலான் மாவட்டத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட அடிப்படைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மூடப்படும்.
புத்தாண்டு வருவதற்கு முன்னதாகவே குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதிகாலையில் வெளியே செல்பவர்கள் குளிரில் நடுங்க வேண்டியுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளின் நிலையும் இதேதான். காலையில் மூடுபனி காரணமாக சூரியன் தாமதமாக உதிக்கிறது. உத்தரபிரதேசத்தில் நிலவும் குளிர் காரணமாக குழந்தைகளின் பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதனுடன், ஜாலான் மாவட்டத்தில் ஆட்சியர் உத்தரவின் பேரில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.