முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிடிவி தினகரனை 4 ஊர்ல அடிச்சாங்களே போட்டியா..! பணம் வாங்கிட்டியா நீ..! நிருபரிடம் கோபப்பட்ட தங்கத்தமிழ்செல்வன்..!

09:07 PM Apr 03, 2024 IST | Kathir
Advertisement

உசிலம்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் வாக்குசேகரிக்க வராமலிருப்பது குறித்து கேள்வி கேட்ட நிருபரை பார்த்து கோபப்பட்ட தேனீ திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன்.

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கப்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் 4க்கும் மேற்ப்பட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி நிர்வாகிகளை சந்தித்துள்ளார். ஆனால் இதுவரை பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கவில்லை.

அதிமுக அமமுக நா.த.கட்சி வேட்பாளர்கள் எல்லாம் உசிலம்பட்டி பகுதியில் பாதி பிரச்சாரத்தை முடித்துவிட்ட நிலையில் திமுக வேட்பாளரின் வாக்குசேகரிக்கும் நிகழ்ச்சி நிரல் குறித்து கட்சியினருக்கும் முறையாகத் தெரியவில்லை. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த வீரத்தியாகிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் மதுரை புறநகர் மாவட்டச்செயலாளர் மணிமாறன் தலைமையில் தேனி வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் தங்கதமிழ்செல்வன் பேசும் போது கச்சத்தீவு பிரச்சனையை தேர்தலுக்காக மத்திய அரசு பயன்படுத்தி வருகின்றது என குற்றம் சாட்டினார். அப்போது நிருபர் ஒருவர் இன்னும் மக்களிடம் வாக்கு சேகரிக்க வராமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்ப, கோபப்பட்ட தங்கத்தமிழ்செல்வன், "எந்த டிவிப்பா நீ, டிடிவி தினகரனை 4 ஊர்ல அடிச்சு விரட்டுனாங்க அத போட்டயா நீ. கேட்கிற கேள்வியே தப்பு. உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என" பாதியிலேயே முடித்து கிளம்பி சென்றார்.

Also Read: Election 2024: ஆபரேஷன் தமிழ்நாடு.!! 4 ரோடு ஷோ, 1 பொதுக்கூட்டம்.!! பக்கா பிளானுடன் களமிறங்கும் அமித் ஷா.!!

Tags :
thanga tamil selvanthanga tamil selvan today
Advertisement
Next Article