டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனல் முடக்கம்..? அடுத்த பேரிடி..!! காவல்துறை அதிரடி..!!
டிடிஎஃப் வாசன் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும். அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், அவரது யூடியூப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடலாம் என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதையடுத்து, 3 வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதித்து டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்திற்கு காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, தனது இரு சக்கர வாகனத்தை தன்னிடம் காவல்துறையினர் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என டிடிஎஃப் வாசன் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.