பாம்புடன் வித்தை காட்டிய டிடிஎஃப்..!! வீட்டிற்கு பறந்து வந்த வனத்துறை..!! வீடியோ வைரலானதால் அதிரடி சோதனை..!!
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் யூடியூபர் டிடிஎப் வாசன். சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருப்பவர் தான் டிடிஎஃப் வாசன். முன்பு அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, ‘மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி விலகியது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். அந்த வரிசையில் சமீபத்தில், தனது கையில் பாம்பு ஒன்றை சுற்றியபடி வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார்.
அந்த வீடியோவில், தான் அந்த மலைப்பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், டிடிஎஃப் வாசன் தற்போது சென்னையில் வசித்து வரும் நிலையில், அவரிடம் இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, டிடிஎஃப் வாசனின் சொந்த ஊரான கோவை வெள்ளியங்காட்டில் நேற்று காரமடை வனத்துறையினர் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Read More : ஆட்டு மந்தைக்குள் சிக்கிக் கொண்ட பாஜகவினர்..!! மதுரையில் வெடித்த சர்ச்சை..!! போலீசாரிடம் வாக்குவாதம்..!!