கண்ணாம்பூச்சி விளையாட்டு.. காதலனை சூட்கேஸில் அடைத்து மூச்சு திணற வைத்த காதலி..!! கடைசியில் நடந்த விபரீதம்..
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதான பெண், தனது காதலனை சூட்கேசில் அடைத்து மூச்சு திணற வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 2020-ம் ஆண்டு, பூனும் அவரது காதலர் டோரஸும் தங்கள் வின்டர் பார்க் குடியிருப்பில் நன்றாக குடித்துவிட்டு கண்ணாமூச்சி விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது டோரஸை ஒரு சூட்கேஸில் இரவு முழுவதும் அடைத்து வைத்து வீடியோ எடுத்துள்ளார். மறுநாள் காலை, சூட்கேஸுக்குள் இருந்த டோரஸிடம் எந்த பதிலும் வராததை அடுத்து சூட்கேசை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சூட்கேசில் இருந்த டோரஸ் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, மொபைல் போனில் பூன் எடுத்த வீடியோக்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வீடியோவில் சூட்கேஸுக்குள் சிக்கியிருந்த டோரஸ் உதவிக்காக கெஞ்சுவதை நம்மால் பார்க்க முடிகிகிறது. அவர் மூச்சுத் திணறுவதையும் பூனிடும் கெஞ்சுவதும், அதற்கு பூன், “உனக்கு இது தேவைதான்” என கூறுவதையும் கேட்க முடிகிறது. இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து பூன் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், டோரஸ் தன்னை அடுத்து கொடுமை படுத்தியதாகவும்,தன்னை தற்காத்து கொள்ளவே அவர் இவ்வாறு செய்ததாகவும் முறையிட்டனர். பூன் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் இருப்பினும், இந்த வாதத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பூனிற்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, டோரஸின் குடும்ப உறுப்பினர்கள் உணர்ச்சி வசப்பட்டதோடு கோபமாக கத்தினர்.
Read more ; நாடாளுமன்றத்தில் கட்டு கட்டாக சிக்கிய பணம்.. காங்கிரஸ் எம்.பி-க்கு தொடர்பா? உண்மை என்ன?