தலைக்கேறிய போதை..!! மூதாட்டியை புதருக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம்..!! மருத்துவ பரிசோதனையில் அம்பலமான உண்மை..!!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த அடுத்த பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி. இவர், சென்னாங்காரணி கிராமத்தில் வசித்து வரும் தனது அக்காள் மகள் வீட்டிற்கு கடந்த 6ஆம் சென்றுள்ளார். பின்னர், மாலையில் இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரை பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர் மூதாட்டியை அங்கிருந்த புதருக்குள் இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில், நிலைகுலைந்து போன பூங்கொடி, கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்தவர்கள், மூதாட்டியை மீட்டு ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அங்கு வந்த போலீசார், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரிடம் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.
மேலும், அப்பகுதியில் சாலைக்கான பணிகள் நடைபெற்று வருவதால் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி, வடமாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள் மற்றும் சென்னாங்காரணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் என 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மருத்துவ பரிசோதனையில் சிக்கிய இளைஞர்..!!
தொடக்கத்தில் விசாரணையில் அவர்கள் யாரும் நடந்த சம்பவத்தை ஒப்புக் கொள்ளாததால் 4 பேரையும் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சென்னாங்காரணி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ராஜா என்பவர் மருத்துவ பரிசோதனை அறிக்கை ஒத்து போனதால், மேல் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார், மூதாட்டியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியது. அதைத்தொடர்ந்து அவரை மீண்டும் ஊத்துக்கோட்டை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் நடந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது பெயர் ராஜா என்றும் அவருடைய தந்தை, தாய் மரணம் அடைந்ததால் அவருடைய தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. தற்போது அவர் கூலி வேலைக்கு சென்று வருவதும் விசாரணையில் அம்பலமானது.
4 குவாட்டர்.. தலைக்கேறிய போதை..!!
அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அன்றைய தினம் 4 குவாட்டருக்கு மேல் மதுபானம் அருந்தியதால் போதை தலைக்கு ஏறி, மூதாட்டியிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
Read More : ”ராசாவே உன்ன காணாத நெஞ்சு”..!! காற்றில் கரைந்தார் பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன்..!! உடல் தகனம்..!!