திருமணத்தை மீறிய தகாத உறவு.. கள்ளக்காதலியிடம் இழப்பீடு கேட்ட சீன பெண்..!! - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
கணவன்-மனைவிக்கு இடையேயான உறவுகள் ஒருவருக்கொருவர் எதையும் மறைக்காத வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் இது நடக்காது. சிலர் வேறு உறவுகளுக்குள் செல்கிறார்கள், அது அவர்களின் துணைக்கு கூட தெரியாது. இதனால், அவரது வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குடும்பமும் சீரழிகிறது. சீனாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது, இது தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின்படி, இந்த சம்பவம் 2022 இல் வாங் என்ற திருமணமான ஆணும் லியு என்ற பெண்ணும் காதலித்து திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டபோது நடந்துள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த வாங் என்ற நபர் திருமணம் ஆகி, குடும்பத்துடன் வசிந்து வந்தார். கடந்த 2022 இல் லியு என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. மேலும் இருவருமே திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்துள்ளனர்.
ஜூலை 2023 இல் உணவகம் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு குடிபோதையில் லியுவின் பிஎம்டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தனர். லியு வாகனம் ஓட்டியுள்ளார். வாங் குடித்துவிட்டு, சீட்பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்துள்ளார். திடீரென ஓடும் காரில் இருந்து வாங் கீழே தவறி விழுந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக 24 மணி நேரம் கழித்து சிகிச்சை பலனின்றி வாங் உயிரிழந்தார்.
பின் இதுகுறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், வாங் சீட் பெல்ட் அணியத் தவறியதாலேயே காரிலிருந்து கீழே விழ நேர்ந்ததாகவும், இதில் லியு மீது எந்த தவறும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என கூறியுள்ளனர். இருப்பினும், வாங்கின் மனைவி தனது மறைந்த கணவரின் காதலியிடம் இழப்பீடாக 6 லட்சம் யுவான் (சுமார் ரூ.70.36 லட்சம்) கேட்டுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவரது கணவர் இறந்து போனதற்கு ஏதோ ஒரு வகையில் லியூ காரணமாக இருந்துள்ளார் என்பதற்காக, அவர் 65,000 யுவான் (சுமார் ரூ. 8 லட்சம்) செலுத்துமாறு உத்தரவிட்டார்.
Read more ; நீங்க ஆபத்தில் இருக்கீங்களா..? குளிர்காலத்தில் சிறுநீரக கற்கள் பிரச்சனை மோசமாகலாம்.. எப்படி தடுப்பது..?