பரபரப்பு...! போதைப்பொருள் கடத்தல் வழக்கு... ஜாபர் சாதிக், அமீர் உள்ளிட்ட 12 குற்றவாளிகள்..!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகளும் கடந்த ஜூன் 26-ல் ஜாபர் சாதிக்கை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாபர் சாதி்க்கின் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குநர் அமீரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் முகமது சலீமை அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாபர் சாதிக், முகமது சலீம், ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பானு, இயக்குநர் அமீர் உட்பட 12 பேருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை 13-வது கூடுதல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஜாபர் சாதிக் தம்பி முகமது சலீம், மனைவி பானு, சினிமா இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அவர்களிடம் விசாரணை நடத்திய அமலாக்க துறையினர் ஜாபர் சாதிக் தம்பி முகமது சலீமை கைது செய்தனர். ஜாபர் சாதிக், அவரது குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில் இருந்த சொத்துகள் முடக்கப்பட்டன. சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கில், அமலாக்க துறையினர் 302 பக்க குற்றப்பத்திரிகையை செப்டம்பர் 18ல் தாக்கல் செய்தனர்.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம், மைதீன் கனி, இயக்குநர் அமீர் உள்ளிட்ட 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசிய நிறுவனங்களுக்கு உணவு, மருந்து மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டது. போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் தொடங்கிய வர்த்தகத்தில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜாபர் சாதிக்கின் ரூ. 55.3 கோடி சொத்துகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.